ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’

By செய்திப்பிரிவு

சிவராஜ்குமார் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் ‘மஃப்டி’. இதில் ஸ்ரீமுரளி, ஷான்வி ஸ்ரீவத்ஸவா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கன்னடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தமிழில் சிலம்பரசன் நடிப்பில் ‘பத்து தல’ என்ற பெயரில் வெளியானது. தமிழிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ‘மஃப்டி’ படத்தின் முன்கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘பைரதி ரணகல்’ படம் கடந்த ஆண்டு நவம்பரில் திரையரங்குகளில் வெளியானது. இதில் சிவராஜ்குமார், ராகுல் போஸ், ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ‘கே.ஜி.எஃப்’ படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்து இசையமைத்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடியில் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

30 days ago

ஓடிடி களம்

30 days ago

மேலும்