ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ டிச.27-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வரும் டிசம்பர் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த நவம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சொர்க்கவாசல்’. அஸ்வின் ரவிச்சந்திரன், தமிழ் பிரபா ஆகியோர் இந்தப் படத்தில் எழுத்தாளர்களாக பணிபுரிந்துள்ளனர்.

ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன், ஷராபுதீன், பாலாஜி சக்திவேல், சந்தான பாரதி, ஹக்கிம் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் பெற்றது. படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தை அடிப்படையாக உருவான இப்படத்தில் அதன், விறுவிறுப்பான காட்சி அமைப்பால் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் வரும் டிசம்பர் 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

மேலும்