டோவினோ தாமஸின் ‘ஏஆர்எம்’ நவம்பர் 8-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’ மலையாள படம் வரும் நவம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’ (Ajayante Randaam Moshanam). கேரளாவில் 1900, 1950 மற்றும் 1990 என வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் இப்படத்தின் கதையில் 3 கதாபாத்திரங்களில் டோவினோ தாமஸ் நடித்துள்ளார். கிருத்தி ஷெட்டி, பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, சிவாஜித் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 12- ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில் இந்தப் படம் வரும் நவம்பர் 8-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோவினோ தாமஸ் நடிப்பில் அடுத்ததாக ‘எம்புரான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

6 hours ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

28 days ago

ஓடிடி களம்

28 days ago

மேலும்