ரஜினியின் ‘வேட்டையன்’ நவம்பர் 8-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் நவம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். காவல்துறை என்கவுன்டருக்கு எதிராக பேசிய இப்படம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. கமர்ஷியல் + கன்டென்ட்டால் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் கொண்ட இந்தப் படம் உலக அளவில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் வரும் நவம்பர் 8-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

மேலும்