சென்னை: நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ஆவண பட பாணியிலான திருமண வீடியோ நவம்பர் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் நயன்தாராவின் திருமண வீடியோ என்பதையும் கடந்து அவரின் வாழ்க்கைப் பக்கங்களையும் பேசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 'நானும் ரௌடி தான்' படத்திலிருந்து காதலிக்கத் தொடங்கினர். இருவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் மாமல்லபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணி ரத்னம், அட்லி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்தத் திருமணத்தின் வீடியோ வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியது. இதற்கு ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆவணப்பட பாணியிலான இந்த வீடியோ வரும் நவம்பர் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நயன்தாரா திரைக்குப் பின்னால் உள்ள அவரது பக்கங்கள் குறித்து பெரிதாக பகிர்ந்து கொண்டதில்லை. தற்போது இந்த ஆவணப்படம் அவரது வாழ்க்கை பயணத்தையும், திரைப் பயணத்தையும், அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள், போராட்டம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் பேசும் என தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
15 hours ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
24 days ago