சென்னை: பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘கில்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (செப்.6) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாலிவுட் படம் ‘கில்’. இந்தப் படத்துக்கு விக்ரம் மாண்ட்ரோஸ், ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளனர். கரண் ஜோஹர், குனீத் மோங்கா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் கடந்த ஜுலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஒரு ரயிலில் நடக்கும் ஆக்ஷன் சம்பவங்கள் தான் மொத்த படமும். எந்த இடத்திலும் அயற்சி கொடுக்காமல் நகரும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பயனாக ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.50 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை ஈட்டியதாக தகவல் வெளியானது. திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் ஓடிடிக்காக காத்திருக்கும் நிலையில், இப்படம் வெள்ளிக்கிழமை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. | விமர்சனத்தை வாசிக்க: KILL - திரை விமர்சனம்: அதீத ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு ஓர் அட்டகாசமான பேக்கேஜ்!
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
18 hours ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
29 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago