பங்கஜ் திரிபாதி Vs அலி ஃபசல்: ‘மிர்சாபூர்’ 3-வது சீசன் ட்ரெய்லர் எப்படி? 

By செய்திப்பிரிவு

மும்பை: பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘மிர்சாபூர்’ பாலிவுட் தொடரின் 3-வது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப்சீரிஸ் ‘மிர்சாபூர்’. இதன் முதல் சீசனில் 9 எபிசோடுகள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் இரண்டாவது சீசன் கடந்த 2020-ம் ஆண்டு 10 எபிசோடுகளாக வெளியானது. அடுத்து 3-வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ‘மிர்சாபூர்’ 3-வது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் அறிவித்தது. இந்த சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - இந்த சீசன் பங்கஜ் திரிபாதிக்கும் - அலி ஃபசலுக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என தெரிகிறது. தொடக்கத்திலேயே ஃபசல், பங்கஜ் திரிபாதியின் உருவச்சிலையை உடைக்கிறார். பிறகு அவர் சிறையில் இருப்பது போல வும் காட்டப்படுகிறது. முதல் 2 சீசன்களில் இருந்த அதே வன்முறை அப்படியே ட்ரெய்லர் முழுவதும் பரவிக்கிடக்கிறது.

விஜய் வர்மா நடுவில் ஒரு ஃப்ரேமில் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார். ட்ரெய்லர் முழுவதும் பங்கஜ் திரிபாதியை தேடிக்கொண்டிருக்க இறுதியில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார். “இது நானும், அப்பாவும் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம். இதுவரை வரலாற்றில் நிகழாததை நிகழ்த்தி காட்டுவோம்” என அவரின் சபதத்துடன் ட்ரெய்லர் முடிகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

மேலும்