‘ரயில்’ முதல் ‘அரண்மனை 4’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்? 

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: பாஸ்கர் சக்தியின் ‘ரயில்’, விதார்த்தின் ‘லாந்தர்’, புதுமுக நடிகர்களின் ‘பயமறியா பிரம்மை’ ஆகிய தமிழ்படங்கள் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின்றன. பார்வதி - ஊர்வசியின் ‘உள்ளொழுக்கு’, பிஜூ மேனனின் ‘நடன்ன சம்பவம்’ (Nadanna Sambhavam) ஆகிய மலையாள படங்களை நாளை காண முடியும். ‘ஜேஎன்யூ’ பாலிவுட் படம் நாளை வெளியிடப்பட உள்ளது. சாம் வொர்திங்டனின் ‘தி எக்ஸாரிசம்’ (The Exorcism) ஹாலிவுட் படம் நாளை வெளியாகிறது.

ஓடிடி ரிலீஸ்: ஜெஸிகா ஆல்ஃபாவின் ‘ட்ரிக்கர் வார்னிங்’ (Trigger Warning) ஹாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ திரைப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை காண முடியும். அர்ஜூன் தாஸின் ‘ரசவாதி’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

டோவினோ தாமஸின் ‘நடிகர்’ படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை காணலாம். ஷில்பா மஞ்சுநாத்தின் ‘சிங்கப்பெண்ணே’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் தற்போது காணக்கிடைக்கிறது.

வெப்சீரிஸ்: ஹாலிவுட் தொடரான ‘ஹவுஸ் ஆஃப் ட்ராகன்’ தொடரின் 2ஆவது சீசன் ஜியோ சினிமா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

மேலும்