300 கிலோ எடையில் 10,000+ நகைகள் - சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹீராமண்டி’ ஆச்சரியம்

By செய்திப்பிரிவு

மும்பை: சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹீராமண்டி’ வெப் சீரிஸுக்காக 300 கிலோ எடை கொண்ட 10,000-க்கும் மேற்பட்ட நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல் மற்றும் சஞ்சீதா ஷேக் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ள பாலிவுட் இணையத் தொடர் ‘ஹீராமண்டி’ (Heeramandi). பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்தத் தொடர் வரும் மே 1-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடருக்காக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி டெல்லியில் உள்ள ‘ஸ்ரீ பரமணி ஜூவல்ஸ்’ (Shri Paramani Jewels SPJ) நகைக்கடைக்கு தானே நேரடியாக சென்று ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் மணிக்கணிக்கில் விளக்கி, 10,000-க்கும் மேற்பட்ட நகைகளை ஆர்டர் செய்துள்ளார்.

இது தொடர்பாக அந்தக் கடையின் நிறுவனர் வினய் குப்தா கூறுகையில், “எங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய பணி. இதற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணித்து வேலை பார்த்துள்ளோம். பன்சாலியின் எண்ண ஓட்டத்தில் இருக்கும் நகைகளை நிஜத்தில் கொண்டுவர இரவு பகலாக வேலை பார்த்தோம்.

கதையையும், கதாபாத்திரங்களையும் உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொரு நகையாக வடிவமைத்தோம். 3 ஆண்டுகளாக 3 அறைகள் முழுக்க நகைகளை வைத்து, 500 ஆண்டுகளுக்கு முன்பான நகைகளின் வடிவமைப்பை கொண்டுவர முயன்று உழைத்தோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

15 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்