Case of Kondana - பாவனா மிரட்டும் த்ரில் த்ரில்லரில் ஈர்ப்பனுபவம் | ஓடிடி திரை அலசல்

By குமார் துரைக்கண்ணு

தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கும் பெங்களூருவில், அதைவிட கொடூரமான சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடித்ததா, இல்லையா என்பதுதான் ‘Case of Kondana’ கன்னட திரைப்படத்தின் ஒன்லைன்.

பெங்களூரு நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் அங்குள்ள மக்களின் அமைதியைக் குலைக்கிறது. இதனால், அச்சம் கொள்ளும் மக்கள் காவல் துறையினர் மீது அதிருப்தி அடைகின்றனர். தொடரும் கொலைகளால் அசிஸ்டென்ட் கமிஷ்னர் லக்‌ஷ்மிக்கு (பாவனா) மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. லக்‌ஷ்மி மற்றும் அவரது குழுவினர், இந்தத் தொடர் கொலைகளைச் செய்து வரும் நபரை தீவிரமாக தேடுகின்றனர். இந்த நேரத்தில் அந்த ஸ்டேஷனுக்கு புதிய ஏஎஸ்ஐ ஆக பணியமர்த்தப்படுகிறார் வில்சன் (விஜய் ராகவேந்திரா). அதேநேரம், பெங்களூருவின் ஹவுசாலா சாலை ஓரம் பானிபூரி விற்பனை செய்யும் ராஜு வியாபாரத்துக்கு வந்தநிலையில், அங்கிருந்து மாயமாகிறார்.

இந்த மூன்று சம்பவங்களையும் ஒரு புள்ளியில் இணைத்து, ஒரே இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் படமாக வந்துள்ள கன்னட திரைப்படம் ‘Case of Kondana’.இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் மேக்கிங், ஆரம்பம் முதலே எங்கேஜிங்காக நகர்கிறது. விறுவிறுப்பான முதல்பாதியிலேயே இயக்குநர் பார்வையாளர்களைக் கதைக்குள் கொண்டு வந்து, அவர்களையும் குற்றவாளியைத் தேட வைத்துவிடுகிறார். கதை சொல்லியிருக்கும் விதத்தில், இப்படம் மற்ற க்ரைம் த்ரில்லர் படங்களில் மாறுபட்டிருப்பது ஈர்க்கிறது.

தெரியாமல் செய்யும் ஒரு தவறும், அந்தத் தவறை மறைக்க முயலும்போது ஏற்படும் பேரிழப்புகளைத்தான் இப்படம் சுட்டிக் காட்டியிருக்கிறது. தவறு சிறிதாக இருக்கும்போதே, அதை நேர்மையுடன் அணுகி தீர்வு காணபதற்கு பதிலாக மறைக்க நினைத்தால் ஏற்படும் பாதிப்புகள் அந்தத் தவறை மறைக்க முயல்பவருக்கு மட்டுமின்றி, பல அப்பாவிகளுக்கும் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை இப்படம் பேசியிருக்கிறது. காட்சி அமைப்புகள் இயக்குநரின் கதைச் சொல்லும் பாங்கை வெகு சுலபமாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறது. இந்தப் படத்துக்கு விஸ்வஜித் ராவின் ஒளிப்பதிவும், ககன் பதேரியாவின் இசையும் பலம் சேர்த்துள்ளன.

ஏசிபி லக்‌ஷ்மியாக பாவனா மேனன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிகாரத்தையும், அனுதாபத்தையும் கொண்டு தனது முகபாவனைகளில் கொண்டு வரும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். வில்சனாக வரும் விஜய் ராகவேந்திராவுக்கு நல்ல பாத்திரம். நேர்மையான போலீஸ் அதிகாரி, காதலன், குற்ற உணர்ச்சிக் கொண்டவராக வரும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். இவர்கள் தவிர, இப்படத்தில் பாவனாவின் அப்பாவாக வரும் ரங்காயன ரகு உள்ளிட்ட அனைவருமே தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள்தான் நெருடலாக இருக்கிறது. குறிப்பாக ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் அவற்றை அழிக்கும் காட்சிகள் நம்பும் விதமாக இல்லை.

அதேபோல், க்ளைமாக்ஸில் வரும் சண்டைக் காட்சி மிகவும் சினிமாத்தனமாக இருப்பது அயற்சி. மற்றபடி, படம் ஆரம்பம் முதல், இறுதி வரை எங்கேஜிங்காகவே இருக்கிறது. இந்த சில சினிமாத்தனங்களைத் தவிர்த்துவிட்டால், படம் நிச்சயம் சிறப்பான படமாகவே இந்த ‘Case of Kondana’ திரைப்படம் இருக்கும் என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்புகிறவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். அமேசான் ப்ரைம் ஓட்டி தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

மேலும்