மலையாளத்தில் ஹிட்டடித்த ‘பிரமேலு’ ஏப்.12-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘பிரேமலு’ திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், ‘பிரேமலு’. கிறிஸ் ஏ.டி. இயக்கிய இந்தப் படத்தை நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் தயாரித்தனர்.காதல், காமெடி நிறைந்த இந்தப்படம், பிப். 9-ம் தேதி வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.130 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் வரவேற்பு காரணமாக தெலுங்கிலும், தமிழிலும் டப் செய்யப்பட்டு படம் வெளியானது. இந்நிலையில், இப்படம் வரும் இம்மாதம் 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் காண முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

மேலும்