‘மிர்ஸாபூர் சீசன் 3’ முதல் ‘சுழல் சீசன் 2’ வரை - அமேசான் ப்ரைமின் மெகா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்த ஆண்டு வெளியாக உள்ள திரைப்படங்கள், வெப் தொடர்கள் என மொத்தம் 69 தலைப்புகள் அடங்கிய மெகா பட்டியலை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஆண்டுக்கான படங்கள், வெப் தொடர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதனையடுத்து தற்போது அமேசான் ப்ரைம் நிறுவனமும் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் திரைப்படங்கள், வெப் தொடர்கள் என மொத்தம் 69 தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

முந்தைய சீசன்களால் மாபெரும் வரவேற்பை பெற்று, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ’மிர்ஸாபூர் சீசன் 3’, ‘பஞ்சாயத் சீசன் 3’, ‘சுழல் சீசன் 2’, ‘பாதாள் லோக் சீசன் 2’ உள்ளிட்ட தொடர்கள் இந்த பட்டியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

மேலும் சமந்தா - வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள 'சிட்டடேல்: ஹனிபன்னி’ தொடர் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. இது தவிர அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘பி ஹேப்பி’, அனில் கபூரின் ‘சுபேதார்’ ஆகிய படங்கள், அனன்யா பாண்டே பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கால் மீ பே’, பூமி பெட்னேகரின் ‘தல்தால்’ ஆகிய சிரீஸ்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

தமிழில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சுழல்’ தொடரின் இரண்டாவது சீசனை ப்ரைம் வீடியோ அறிவித்துள்ளது. இதில் ஏற்கெனவே இடம்பெற்ற நடிகர்களுடன் கவுரி கிஷன், ‘குக் வித் கோமாளி’ மோனிஷா உள்ளிட்டோரும் நடிக்க இருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

மேலும்