‘விஜய் 69’ முதல் ‘ஹீராமண்டி’ வரை: நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘மெகா’ அறிவிப்புகள்!

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவில் 2024ஆம் ஆண்டுக்கான 8 திரைப்படங்கள், 14 வெப் தொடர்கள் குறித்த மெகா அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் தன்னுடைய வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் மற்றும் ஆவணப்படங்களை களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான 8 திரைப்படங்கள், 14 வெப் தொடர்கள் அடங்கிய ஒரு மெகா பட்டியலை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவற்றில் சிலவற்றுக்கான வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர் சிங் சம்கிலா (Amar Singh Chamkila): இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தில்ஜித் தோசாஞ்ச், பரினீதி சோப்ரா நடித்துள்ள இப்படம், மறைந்த பஞ்சாப் பாடகர் அமர் சிங் சம்கிலாவின் உண்மைக் கதையைச் பேசுகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 12 அன்று வெளியாகிறது.

தோ பட்டி (Do Patti): ஷஷாங்கா சதுர்வேதி இயக்கத்தில் கஜோல் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

மஹராஜ் (Maharaj): சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கத்தில் ஜுனைத் கான், ஜெய்தீப் அஹ்லாவத், ஷர்வரி, ஷாலினி பாண்டே நடித்த இப்படம் 1800 பின்னணியில் உருவாகியுள்ளது. மேலும் சமூகத்தில் ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியாக திகழ்ந்த ஒரு பத்திரிகையாளரின் கதையைச் இது பேசுகிறது. இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

மர்டர் முபாரக் (Murder Mubarak): ஹோமி அடாஜானியாவின் இப்படத்தில் சாரா அலி கான், பங்கஜ் திரிபாதி, விஜய் வர்மா, டிம்பிள் கபாடியா, கரிஷ்மா கபூர், சஞ்சய் கபூர், டிஸ்கா சோப்ரா மற்றும் சுஹைல் நய்யார் நடித்துள்ளனர். மர்டர் மிஸ்ட்ரி படமாக உருவாகியுள்ள இதன் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஃபிர் ஆயி ஹஸீன் தில்ரூபா (Phir Aayi Hasseen Dillruba): 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஹஸீன் தில்ரூபா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இதில், டாப்ஸி, ஜெய்பிரத் தேசாய், மற்றும் விக்ராந்த் மாஸ்ஸே நடித்துள்ளனர். இதன் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சிக்கந்தர் கா முகத்தர் (Sikandar Ka Muqaddar): நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இப்படத்தின் நடிகர்கள் மற்றும் படகுழுவினர், வெளியீட்டு தேதி என எதுவும் அறிவிக்கப்படவில்லை.

விஜய் 69: அக்‌ஷய் ராய் இயக்கத்தில் அனுபம் கேர் நடித்துள்ள இப்படம், 69 வயதில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் ஒரு முதியவரை பற்றி பேசுகிறது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகவில்லை.

வைல்டு வைல்டு பஞ்சாப் (Wild Wild Punjab): சிமர்ப்ரீத் சிங் இயக்கத்தில் வருண் ஷர்மா, சன்னி சிங், மன்ஜோத் சிங், ஜஸ்ஸி கில், பத்ரலேகா, இஷிதா ராஜ் நடித்துள்ள இப்படம், தங்கள் நண்பனுக்காக பழிவாங்கும் நோக்கில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளும் நண்பர்களின் கதையை பேசுகிறது.

டப்பா கார்ட்டெல் (Dabba Cartel): ஷபானா ஆஸ்மி, ஜோதிகா, ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன், அஞ்சலி ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப் தொடரை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார். தானேவில் வாழும் ஐந்து சராசரி குடும்பத்து பெண்களின் வாழ்க்கையை பற்றி இத்தொடர் பேசுகிறது.

ஹீராமண்டி (Heeramandi): சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய இத்தொடரில் மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல் மற்றும் சஞ்சீதா ஷேக் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது இத்தொடர்.

IC 814: தி காந்தஹார் ஹைஜாக் (IC 814: The Kandahar Hijack): அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நசிருதீன் ஷா, அரவிந்த் சுவாமி, தியா மிர்சா, விஜய் வர்மா, பத்ரலேகா, பங்கஜ் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்தொடர், காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தாலிபானகளால் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பேசுகிறது.

காக்கி: தி பெங்கால் சாப்டர் (Khakee: The Bengal Chapter): நீரஜ் பாண்டே இயக்கும் இத்தொடரின் நடிகர்கள், படக்குழு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா ஃபாக்டரி (Kota Factory) சீசன் 3: இத்தொடரின் கடந்த இரண்டு சீசன்கள் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இதன் அடுத்த சீசனை ராகவ் சுப்பு இயக்கியுள்ளார். ஜீதேந்திர குமார், திலோத்தமா ஷோம், மயூர் மோர், ரஞ்சன் ராஜ், ஆலம் கான், ரேவதி பிள்ளை, அஹ்சாஸ் சன்னா, ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மாம்லா லீகல் ஹை (Maamla Legal Hai): ராகுல் பாண்டே இயக்கத்தில் ரவி கிஷன், நிதி பிஷ்ட், ஆனந்த் வி ஜோஷி, நைலா கிரேவால், அஞ்சும் பத்ரா, விஜய் ரஜோரியா, யஷ்பால் ஷர்மா ஆகியோர் நடித்துள்ள இத்தொடர் இன்று (மார்ச் 1) வெளியாகிறது.

மண்டலா மர்டர்ஸ் (Mandala Murders): கோபி புத்திரன் இயக்கத்தில் வாணி கபூர், வைபவ் ராஜ் குப்தா நடித்துள்ள இத்தொடர் கொலைகளை துப்பறியும் இரண்டு டிடெக்டிவ்களை சுற்றி நடக்கிறது.

மிஸ்மேட்ச்டு (Mismatched) சீசன் 3: ஆகார்ஷ் குர்ரானாவின் இத்தொடரில், பிரஜக்தா கோலி, ரோஹித் சரஃப் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யஹ் காளி காளி ஆங்கேய்ன் (Yeh Kaali Kaali Ankhein) சீசன் 2: சித்தார்த் செங்குப்தா இயக்கத்தில் தாஹிர் ராஜ் பாசின், ஆஞ்சல் சிங், ஸ்வேதா திரிபாதி நடித்துள்ள இத்தொடர் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

ஃபேபுலஸ் லைவ்ஸ் vs பாலிவுட் வைவ்ஸ் (Fabulous Lives vs Bollywood Wives): கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களின் மனைவிகள் தங்கள் அன்றாட வாழ்க்கை குறித்து பேசுகின்றனர். இந்த சீசனில் ரித்திமா கபூர் சாஹ்னி, ஷாலினி பாஸ்ஸி மற்றும் கல்யாணி சாஹா பங்கேற்கின்றனர்.

தி கிரேட் இண்டியன் கபில் ஷோ (The Great Indian Kapil Show): நகைச்சுவை கலைஞர் கபில் ஷர்மா நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

தி கிரேட்டஸ்ட் ரிவால்ரி (The Greatest Rivalry – India vs Pakistan): சந்திரதேவ் பகத், ஸ்டீவர்ட் சுக் இயக்கியுள்ள இந்த கிரிக்கெட் குறித்த ஆவணத் தொடர், இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் குறித்து பேசுகிறது. இதில் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், சோயிப் அக்தர், அஸ்வின், இன்சமாம் உல் ஹக், சவுரவ் கங்குலி உள்ளிட்ட வீரர்கள் பேசியுள்ளனர்.

டு கில் எ டைகர் (To Kill a Tiger): பிரியங்கா சோப்ரா தயாரிப்பில் நிஷா பஹுஜா இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது 13 வயது மகளுக்காக போராடும் ஜார்க்கண்ட் விவசாயியின் கதையைச் சொல்கிறது.

யோ யோ ஹனி சிங்: ஃபேமஸ் (Yo Yo Honey Singh: Famous): பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்களை பற்றி இந்த ஆவணத்தொடர். இதனை மோஸஸ் சிங் இயக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்