‘ஜோசுவா’ முதல் ‘ப்ளூ ஸ்டார்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: கவுதம் வாசுதேவ் மேனனின், ‘ஜோசுவா இமை போல் காக்கா’, காளிதாஸ் ஜெயராம் - அர்ஜூன் தாஸின் ‘போர்’, ஸ்ரீகாந்தின் ‘சத்தமின்றி முத்தம் தா’ ஆகிய தமிழ் படங்கள் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின்றன.

வெண்ணிலா கிஷோரின் ‘சாரி 111’, வருண் தேஜின் ‘ஆப்ரேஷன் வெலன்டைன்’ ஆகிய தெலுங்கு படங்கள் நாளை (மார்ச் 1) வெளியாகின்றன. அனுபம் கெரின் ‘காகஸ் 2’, கிரண் ராவின் ‘லாபட்டா லேடீஸ்’ (Laapataa Ladies) பாலிவுட் படங்களை நாளை திரையரங்குகளில் காண முடியும். டெனிஸ் வில்லெனுவேவின் ‘ட்யூன் 2’ ஹாலிவுட் படம் மார்ச் 1-ம் தேதியான நாளை வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ஜோஹன் ரென்ககின் ‘ஸ்பேஸ் மென்’ ஹாலிவுட் படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. அறிவியல் புனைவுக்கதையான ‘கோட் 8: பார்ட் 2’ ஹாலிவுட் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை காண முடியும்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அசோக் செல்வன், சாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது காணக்கிடைக்கிறது. ஹன்சிகாவின் ‘மை நேம் இஸ் ஷ்ருதி’ தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

இணைய தொடர்: விக்ரம் பிரதாப்பின் ‘மாம்லா லீகல் ஹை’ (Maamla Legal Hai) இந்தி தொடர் நெட்ஃப்ளிக்ஸில் நாளை வெளியிடப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்