‘வித்தைக்காரன்’ முதல் ‘மலைக்கோட்டை வாலிபன்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: சதீஷ் நடித்துள்ள ‘வித்தைக்காரன்’, வைபவ் நடித்துள்ள ‘ரணம்’, ஷபீரின் ‘பர்த் மார்க்’, ஜீவன் நடித்துள்ள ‘பாம்பாட்டம்’, ‘பைரி’, ‘க்ளாஸ்மேட்ஸ்’, ‘நினைவெல்லாம் நீயடா’, ‘ஆப்ரேஷன் லைலா’ ஆகிய தமிழ் படங்கள் நாளை (பிப்.23) திரையரங்குளில் வெளியாகின்றன. சவுபின் சாஹிரின் ‘மஞ்சுமள் பாய்ஸ்’ மலையாள படம் இன்று வெளியாகியுள்ளது. யாமினி கவுதம், ப்ரியாமணியின் ‘ஆர்ட்டிகிள் 370’ இந்திப் படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: டைலர் பெர்ரியின் ‘மியா கல்பா’ (Mea Culpa) ஹாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை நேரடியாக வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: மோகன்லால் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் வெள்ளிக்கிழமை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.

இணைய தொடர்கள்: ரோஷன் மாத்யூ, நிமிஷா சஜயனின் ‘போச்சர்’ (Poacher) இணையத் தொடரை நாளை (பிப்.23) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காண முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE