சென்னை: சல்மான் கானின் ‘டைகர் 3’ பாலிவுட் படம் நாளை (ஜன.7) ஓடிடியில் வெளியாகிறது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ப்ரிதம் இசையமைத்துள்ளார்.
யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த நவம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது . படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில், படம் நாளை (ஜன.7) அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை இந்தி தவிர, தென்னிந்திய மொழிகளிலும் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago