'கூச முனிசாமி வீரப்பன்' வீரப்பனை ஹீரோவாக காட்டும் கதையா?

By செய்திப்பிரிவு

வீரப்பன் வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற பெயரில் ஆவணப்பட தொடராக உருவாகியுள்ளது. ஜீ 5 தளத்தில் இத்தொடர் இன்று வெளியாகிறது. தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி தயாரித்துள்ளார். சதீஷ் ரகுநாதன் இசை அமைத்துள்ளார். ஷரத் ஜோதி இயக்கியுள்ள இந்த வெப் தொடர், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநர் ஷரத் ஜோதி கூறும்போது, “இந்தக் தொடருக்கு உண்மையான வீடியோ பதிவுகள் சாட்சியங்களாக இருக்கின்றன. அதன் அடிப்படையில், வீரப்பனின் அருகில் இருந்து சொல்வதைப் போல உருவாக்கி இருக்கிறோம். வீரப்பனை ஹீரோவாக காட்டும் கதையாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். இதுபோன்ற ஒரு டாக்குமென்ட்ரி தமிழுக்கு ரொம்ப புதிது” என்றார். நக்கீரன் கோபால், எழுத்தாளர் ஜெயச்சந்திர ஹாஷ்மி, தயாரிப்பாளர் பிரபாவதி, ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், ஜீ 5 சார்பில் ஷ்யாம் திருமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

10 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

மேலும்