சென்னை: கீர்த்தி சுரேஷும், ராதிகா ஆப்தேவும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர். ‘மோனிகா ஓ மை டார்லிங்’, ‘மிஸர்ஸ் அன்டர்கவர்’, ஆகிய படங்களைத் தொடர்ந்து ராதிகா ஆப்தேவும், ‘போலா ஷங்கர்’ படத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷும் இணைந்து நடிக்கும் புதிய தொடரை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார். ‘அக்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்தத் தொடரை யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. த்ரில்லர் பாணியில் உருவாகும் இத்தொடர் பழிவாங்கும் கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
பாலிவுட்டில் படங்களை மட்டுமே தயாரித்து வந்த யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் அண்மையில் தனது முதல் வெப் சீரிஸான ‘தி ரயில்வே மென்’ தொடரை தயாரித்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. இதன் அடுத்த கட்டமாக கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணையும் தொடரை உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ராதிகா ஆப்தேவை பொறுத்தவரை அவரது நடிப்பில் அடுத்ததாக ‘மெரி கிறிஸ்துமஸ்’ படமும், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து ‘சைரன்’ படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago