சென்னை: ஆர்யா, திவ்யா பிள்ளை நடிப்பில் உருவாகியுள்ள ‘தி வில்லேஜ்’ வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்தொடர் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்தொடரை ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் நவம்பர் 24ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இத்தொடர் வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? - ட்ரெய்லரின் தொடக்கத்தில் தன் மனைவி மற்றும் மகளுடன் ரோட் ட்ரிப் புறப்படுகிறார் ஆர்யா. ஒரு காட்டு வழியின் நடுவே காரின் டயர் பஞ்சர் ஆவதால் மனைவியையும், குழந்தையையும் காரிலேயே விட்டுவிட்டு உதவி தேட செல்கிறார் ஆர்யா. கட்டியல் என்ற அந்த கிராமத்தில் அந்த காட்டுக்குள் சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லை என்ற வசனம் த்ரில்லர் கதைக்களத்துக்கான பில்டப்பை ஏற்றுகிறது. ஜாம்பி போன்ற மனிதர்கள் சிலர் காட்டுக்குள் செல்பவர்களை இழுத்துச் சென்று கொலை செய்கின்றனர். ராணுவத்தின் உதவியுடன் காட்டுக்குள் செல்லும் ஆர்யா, தன் மனைவியையும் குழந்தையையும் மீட்டாரா என்பதுதான் கதையாக இருக்கும் என்பதை ட்ரெய்லரின் மூலம் யூகிக்க முடிகிறது.
’ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’, ‘டார்க்’ பாணியிலான இந்த மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர் தமிழுக்கு புதியது. ஒளிப்பதிவு, இசை, சிஜி என ட்ரெய்லரில் தொழில்நுட்ப அம்சங்களும் தரமான மேக்கிங்கை உறுதி செய்கின்றன. நேர்த்தியான காட்சியமைப்பும், தொய்வில்லாத திரைக்கதையும் இருந்தால் தமிழில் ஒரு சிறந்த படைப்பாக ‘தி வில்லேஜ்’ அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ‘தி வில்லேஜ்’ ட்ரெய்லர் வீடியோ:
» கருணாநிதி நூற்றாண்டு விழா | ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு
» அல்போன்ஸ் அனுப்பிய பாடலும்... கமலின் பதிலும்: பார்த்திபன் பகிர்ந்த வாய்ஸ் மெசேஜ்
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
29 days ago
ஓடிடி களம்
30 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago