விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இறுகப்பற்று’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘இறுகப்பற்று’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ, சானியா ஐயப்பன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்த இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.
திருமண வாழ்க்கையில் தம்பதியர்களிடையே நிகழும் உறவுச் சிக்கல்களை பேசும் இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 2015-ம் ஆண்டு வெளியான ‘எலி’ படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப்படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ளார் இயக்குநர் யுவராஜ். இந்நிலையில் படம் வரும் நவம்பர் 6-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago