விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ அக்.13-ல் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அக்டோபர் 13-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். இதில் ரித்துவர்மா நாயகியாக நடித்துள்ளார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 5 நாளில் ரூ.50 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது.

படம் வெளியாகி 19 நாட்கள் ஆனபோது, உலக அளவில் படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியானது. அண்மையில், இப்படம் இந்தியிலும் வெளியிடப்பட்டது. இதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டத்தாக விஷால் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 13-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

22 hours ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்