அருண்ராஜா காமராஜின் ‘லேபிள்’ வெப் சீரிஸ் மோஷன் போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

அருண்ராஜா காமராஜ் இயக்கும் ‘லேபிள்’ வெப் சீரிஸின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு மே மாதம் வெளியான படம் ‘நெஞ்சுக்கு நீதி’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்த இப்படம் இந்தியில் வெளியான ‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் அதிகாரபூர்வ தழுவலாக வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இணையத் தொடர் ஒன்றை இயக்குகிறார். ‘லேபிள்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தத் தொடருக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தாளராக பங்களித்துள்ள இத்தொடருக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தத் தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த வெப் சீரிஸின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை பொறுத்தவரை, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 20-ஐ வீடியோவின் முதல் காட்சி குறிப்பிடுகிறது. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளை உறுது செய்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் நீதிமன்றத்துக்கான சுவடுகள் தெரிகின்றன. இந்த மோஷன் போஸ்டர் இணையத் தொடர் அழுத்தமான கதையை உள்ளடக்கியிருப்பதை உணர்த்துகிறது. வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

29 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்