லோகி வெப் தொடரின் இரண்டாவது சீசன் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என்று மார்வெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மார்வெல் நிறுவனம் திரைப்படங்கள் தாண்டி சமீபகாலமாக வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. ‘வாண்டாவிஷன்’, ‘லோகி’, ‘மூன் நைட்’, ஆகிய தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் ‘மிஸ் மார்வெல்’, ‘சீக்ரெட் இன்வேசன்’ ஆகிய தொடர்களையும் மார்வெல் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், ‘லோகி’ வெப் தொடரின் இரண்டாம் சீசனின் வெளியீட்டுத் தேதியை மார்வெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 6ஆம் தேதி இத்தொடர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரையும் மார்வெல் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதமே வெளியாகவேண்டிய இந்த சீசன் சில காரணங்களால் தள்ளிப்போனது.
லோகி முதல் சீசன்: ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் டெசராக்ட் (Tesseract)-ஐ பயன்படுத்தி காலப் பயணம் செய்யும் லோகி, மரணத்திலிருந்து தப்பிப்பது போல முதல் சீசனில் காட்டப்பட்டிருந்தது. இதில் லோகியின் பல்வேறு வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தானோஸுக்குப் பிறகு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப் பெரிய வில்லனான ‘காங்’ முதன்முதலில் இந்த சீசனில்தான் அறிமுகம் செய்யப்பட்டார். இதனால், இத்தொடரின் அடுத்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
» அனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ரிலீஸ் தள்ளிவைப்பு
» பிரம்மாண்ட மேடை முதல் ரஜினியின் குட்டிக்கதை வரை: ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago