சென்னை: கடந்த வாரம் வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் வெடித்ததை அமெரிக்க கடற்படை உறுதி செய்தது. இந்தச் சூழலில் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.
கனடா அருகே அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கி, சிதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கியில் செல்லும் வகையில் சாகச சுற்றுலா ஏற்பாடு செய்து வந்தது. அந்த வகையில் கடந்த 18-ம் தேதி 5 பேர் அந்த நீர்மூழ்கியில் பயணித்துள்ளனர். 5 பேரும் டைட்டன் வெடித்த காரணத்தால் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பல் சிதைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 1,600 அடி (487 மீ) தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘டைட்டானிக்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், டைட்டன் சாகச பயணம் குறித்து தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதோடு டைட்டானிக் படம் இயக்குவதற்காக அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள கப்பலை பார்க்க சுமார் 33 முறை ஆழ்கடலுக்குள் சென்றதாக தெரிவித்தார். அதன்மூலம் அந்தக் கப்பலின் கேப்டன் அதில் செலவிட்ட நேரத்தை காட்டிலும் கூடுதலாக தான் இருந்ததாகவும் அவர் சொல்லி இருந்தார்.
இத்தகைய சூழலில் அமெரிக்க நாட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மாதிரியான கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. அந்தத் தளத்தில் டைட்டானிக் திரைப்படம் மீண்டும் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது. அது குறித்த பதிவுகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.
» ஆகமம், பூஜைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» 16 வயதினருக்கும் பாலுறவில் ஈடுபடும் முடிவை எடுக்கும் திறன் இருக்கும்: மேகாலயா ஐகோர்ட் கருத்து
டைட்டானிக் கப்பலை பார்க்க ஆழ்கடலுக்குள் நீர்மூழ்கி மூலம் சாகச சுற்றுலா சென்றவர்களின் பயணம் சோகத்தில் முடிந்த சூழலில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் இந்த நகர்வு இணையதள பயனர்களை முகம் சுளிக்க செய்துள்ளது. அதன் காரணமாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் எனத் தெரிகிறது.
‘இது அதற்கு சரியான நேரம் அல்ல’ என்பதில் தொடங்கி பயனர்கள் தங்கள் கருத்தை இது குறித்து சொல்லி வருவதை பார்க்க முடிகிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago