விதிமீறல்களால் தொடரும் விபத்துக்கள்
சிவகாசி பகுதிகளில் இரவு நேரங்களில் இயக்கப்படும் வாகனங்களில் முறையான சாலை விதிகளை பின்பற்றாமல் கண்களை கூசச் செய்யும் வகையில் முகப்பு விளக்குகள் எரிகின்றன. இதனால் தொடர்ந்து நிறைய விபத்துகள் நடைபெறுகின்றன. விபத்துகளை தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகளை கண்காணித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம், சிவகாசி.
ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
மதுரை பீபீகுளம் ராமமூர்த்தி தெருவில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனகராஜ், மதுரை
பாதியில் நிற்கும் சாலை பணிகள்
வத்தலகுண்டு நகரில் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து 1 கி.மீ. தூரத்துக்கு சாலையை புதுப் பிப்பதற்காக ஜல்லி கொட்டி சாலையில் பரப்பப்பட்டுள்ளது. ஆனா லும் 20 நாட்களுக்கும் மேல் இதே நிலை நீடிப்பதால் தூசி பரவி வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத் துக்கு ஆளாகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், திண்டுக்கல்.
செல்லூரில் குடிநீர் தட்டுப்பாடு
மதுரை செல்லூர் பூந்தமல்லி நகர் பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். முறையாக சுத்தமான குடிநீர் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்குமார், மதுரை
பள்ளிகள் அருகே மது விற்பனை
தேனி மாவட்டம், சின்னமனூரில் தினந்தோறும் இரவு 10.30 மணிக்கு மேல் பள்ளி, நூலகம் உள்ள பகுதிகளின் அருகே மதுபானங்கள் விற்கப் படுகின்றன. இதனால் இப்பகுதியில் பலர் போதை யில் சுற்றுகின்றனர். எனவே, இப்பகுதியில் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.
எஸ்.நாகரெத்தினம், சின்னமனூர்
சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
பழநி பேருந்து நிலையம் அருகே நகரின் மையமாக பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதியில் இருந்த ரவுண்டானாவை இடித்து தடுப்பு வேலி அமைத்துள்ளனர். அந்த இடத்தில் உள்ள பெரிய பள்ளத்தால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபியுல்லா, பழநி.
மண்டேலாநகர் பகுதியில் தொடரும் விபத்து
மதுரையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள மண்டேலா நகரில் காவல்துறையினரோ, மின்விளக்குகளோ இல்லை. அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவேரிமுத்து, பெருங்குடி, மதுரை.
ஆதார் அட்டை பெற அலைக்கழிப்பு
என் மகனுக்கு பள்ளி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் மூன்று முறை ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது. ஆனால் இதுவரை ஆதார் அட்டை கிடைக்கவில்லை. தனியாரிடம் ரூ.100 கொடுத்து புகைப்படம் எடுப்பவர்களுக்கு மட்டும் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
ராஜா, சின்னமனூர்
நிழற்குடை வசதியில்லை
ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதியில்லை. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, உடனடியாக நிழற்குடை ஏற்படுத்தி தர வேண்டும்.
கருத்தப்பாண்டி, ராஜபாளையம்
பன்றி வளர்ப்பால் சுகாதாரக்கேடு
ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் இடத்தில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இதனை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவியரசன், ஒட்டன்சத்திரம்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
3 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago