உங்கள் குரல்: தேனியில் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

By செய்திப்பிரிவு

கழிவுப்பொருட்களை எரிப்பதால் மூச்சுத்திணறல்

மதுரை விரகனூர் ரிங் ரோட்டின் சாலையோரத்தில் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கழிவுப் பொருட்கள் எரிக்கப்படுகின்றன. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வெற்றிவேந்தன், விரகனூர், மதுரை.

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு

பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது எனக் கூறி நடத்துநர்கள் பயணிகளிடம் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். அதேபோல கடைகளிலும்கூட நாணயங்களை வாங்க வியாபாரிகள் தயங்குகின்றனர். இதனால் பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இஸ்மாயில், கண்ணன், மதுரை.

சாலையில் பள்ளங்களால் தொடரும் விபத்துகள்

மதுரை உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரை சாலையின் பெரும்பாலான இடங்களில் அதிகளவிலான பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான்சன் எபினேசர், மதுரை.

லேசான மழைக்கே தாங்காத பஸ்கள்

புதுக்கோட்டை, சிவகங்கை வழியாக திருச்சி, பரமக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் லேசான மழைக்குக்கூட தண்ணீர் உள்ளே விழுகிறது. இதுபோன்ற பேருந்துகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கலைமணி, இளையான்குடி.

ஆதார் அட்டை கட்டாயமா?

மதுரை பேங்க் காலனி பகுதியில் ஒருமுறை மட்டுமே ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்டது. தற்போது ஆதார் அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனையடைகின்றனர்.

சுரேஷ்குமார், மதுரை.

வேகத்தடை அமைக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம்- திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள ஆண்டாள் திரையரங்கம் அருகே உள்ள வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முருகன், திருவில்லிபுத்தூர்.

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியில் உள்ள விநாயகர் கோயில் நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்துள்ளது. எப்போது இடிந்து விழுமோ என அச்சமாக உள்ளது. ஆனாலும் தொடர்ந்து இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணிக்கவாசகம், உத்தமபாளையம்.

தெரு நாய்கள் தொல்லை

மதுரை கோரிப்பாளையம் திருமலை சந்து பகுதியில் நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரசிதாபானு, மதுரை.

மந்தமான ரயில்வே மேம்பால பணி

பரமக்குடியில் ரயில்வே மேம்பாலப்பணிகள் நீண்ட நாட்களாகியும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பாலமுருகன், பரமக்குடி.

சாலையை ஆக்கிரமித்த கடைகள்

திருவில்லிபுத்தூரில் பேருந்து நிலையத்தைச் சுற்றி சுமார் 10 அடி தொலைவுக்கு சாலையை ஆக்கிரமித்து புரோட்டா மற்றும் உணவுக் கடைகள் உள்ளன. சாலையின் நடுவிலேயே அடுப்பு வைத்து சமையல் செய்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ரத்தினவேல், திருவில்லிபுத்தூர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

3 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

24 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்