வாசகர் திருவிழா 2016 | கோயம்புத்தூர்
கற்பிக்கும், கற்றுக்கொள்ளும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும். கற்றுக் கொடுக்கிற, கற்றுக்கொடுக்கும் சூழலை உருவாக்குகிற ‘தி இந்து’வுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எழுத்தாளரும், இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, வாசகர்களின் எண்ண ஓட்டங்களை அறிய, அவர்களோடு கைகோர்த்து ஊர்கள்தோறும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ஓசூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சிதம்பரத்தைத் தொடர்ந்து கோவையில் நேற்று வாசகர் திருவிழா நடைபெற்றது.
கோவை அவிநாசி சாலையில் நவஇந்தியா பின்புறம் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழா, பாலகிருத்திகாவின் இறை வணக்கத்துடன் இனிதே தொடங்கியது. ‘தி இந்து’ முதுநிலை பொது மேலாளர் வி.பாலசுப்பிரமணியன் வரவேற்று, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
‘தி இந்து’ தமிழ் இணைப்பிதழ்களின் ஆசிரி யர் டி.ஐ.அரவிந்தன் அறிமுக உரையாற்றினார்.
இதில், எழுத்தாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், திரைப்பட இயக்குநர், நடிகர் எம்.சசிகுமார், சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன், ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன், இந்துஸ்தான் கல்விக் குழுமத் தாளாளர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
விழாவில், எழுத்தாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாவது: தமிழ் மக்களால் வளர்ந்த ‘தி இந்து’ நாளிதழ் 135 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் நாளிதழ் தொடங்கியதன் மூலம் தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய நன்றிக் கடனைத் செலுத்திவிட்டது.
தாய்ப்பாலில்கூட சர்க்கரையைக் கலந்து குடிப்பதுபோல, தமிழ் மொழியுடன் அந்நிய மொழியைக் கலந்துவிட்டோம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு உதவும் ‘தி இந்து’வைப் பாராட்டுகிறேன்.
பத்திரிகைகளின் கருத்துக்கு மிகவும் மரியாதை உண்டு. அதைக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும். நல்ல வாசிப்பு என்பது கற்றுக் கொடுப்பதும், கற்றுக்கொள்வதும் ஆகும். கற்றுக்கொள்ளும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும். நாம் துன்பப்படும்போது வாழ்க்கை நம்மைப் பார்த்து நகைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கும்போது புன்னகைக்கிறது. பிறரின் துன்பத்தைத் துடைக்கும்போதுதான் வாழ்க்கை நம்மை வணங்குகிறது. அதேபோல, கற்றுக்கொடுக்கிறவர்களைப் பார்த்து வாழ்க்கை வணங்கும். எனவே, கற்றுக்கொடுக்கிற, கற்றுக்கொடுக்கும் சூழலை உருவாக்குகிற ‘தி இந்து’வுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விழாவில், ‘தி இந்து’ விளம்பரப் பிரிவுத் தலைவர் ஷங்கர் சுப்பிரமணியன், விநியோகப் பிரிவு மண்டலப் பொது மேலாளர் பி.ராஜ்குமார், துணை மண்டலப் பொது மேலாளர் எம்.ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை மண்டல மேலாளர் கே.செல்வேந்திரன் நன்றி கூறினார்.
கோவை மண்டலத்தைச் சேர்ந்த முகவர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவுக்கு வந்த வாசகர்கள், ரோஜா பூக்களுடன் வரவேற்கப்பட்டனர். அனைவருக்கும் தேநீர், மதிய உணவு வழங்கப்பட்டது.
விழாவையொட்டி, ‘தி இந்து’ பதிப்பு வெளியிட்ட நூல்கள் வாசகர்களுக்கு சிறப்புத் தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டன. வாசகர்கள் பலரும் ஆர்வமுடன் இவற்றை வாங்கிச் சென்றனர்.
பொள்ளாச்சி வாசகர்களுக்காக, நாச்சிமுத்து வேளாண்மைக் கல்லூரி சார்பில் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.
விழாவை, ‘தி இந்து’வுடன் இணைந்து லலிதா ஜுவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளை, ஹோட்டல் ஜி.ஆர்.டி. வைப், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி, மில்கா ஒண்டர் கேக், ரேடியோ சிட்டி, பாலிமர் சேனல், ஐடியா 4ஜி ஆகியவை நடத்தின.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அரங்கம் நிறைந்த இந்த கொண்டாட்டத்தில் மகிழ்ச்சி பொங்க பங்கேற்று சிறப்பித்த வாசகர்கள்.
படங்கள்: ஜெ.மனோகரன்
முக்கிய செய்திகள்
மற்றவை
3 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago