வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மலைப் பகுதியை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டியுள்ளனர். இதை அகற்ற வேண்டும் என அளித்த மனுவின் மீது வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வாசகர் தேவசேனாதிபதி என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் புகாரை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சீனிவாசா திரை யரங்கம் எதிரில் தொடங்கி மலையடிவாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். அங்கு வீடுகளைக் கட்டியதுடன் சாலை யோரத்தில் வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகள் தொடர் பாக, வேலூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தபோது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்கள் கேட்டு மனு அளித்தேன். அவர்கள் அளித்த பதிலில் ‘அந்த இடம் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய் துள்ளதாக’ தெரிவித்தனர். அதற் கான முழு விவரங்களையும் அளித்தனர். பின்னர், ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் முழுவதையும் அப் புறப்படுத்துமாறு மனு அளித்தேன். வட்டாட்சியர், வருவாய் கோட் டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலதரப்பில் அளித்த மனுவின் மீது யாருமே நடவடிக்கை எடுக்க வில்லை’’ என்றார்.
இதுகுறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆக்கிரமிப்பு தொடர்பான மனு நிலுவையில் உள்ளது. அந்த இடத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களை, அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றால் மாற்று இடம் வழங்க வேண்டும். அதற்கான இடம் கிடைப்பதில் சிக்கல் இருக் கிறது. அப்படியே இடம் கிடைத் தாலும் அவர்கள் அந்த இடத் துக்குச் செல்வார்களா? என்று தெரியவில்லை. அங்கு ஆக்கிர மிப்புகள் தொடராமல் இருக்கவும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக் கப்படும்’’. என்றனர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
3 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
24 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago