திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் குப்பை, இறைச்சி கழிவுகள் தேங்கிக் கிடப் பதால் பொதுமக்கள், கிரிவல செல்லும் பக்தர்கள் அவதிப் பட்டு வருவதாக திருவண்ணா மலையைச் சேர்ந்த வாசகர் செந்தில்குமார் என்பவர், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ‘திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே 25 ஏக்கர் இடத்தில், நகராட்சி சார்பில் குப்பை கொட்டப்படுகிறது. மக்கும் குப்பையும் மக்காத குப்பையும் குவிந்து கிடக்கின்றன.
மேலும், மருத்துவக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் டயர்கள் போன்றவை தேங்கி உள்ளன. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. குப்பைக்கு விஷமிகள் தீ வைத்து எரிப்பதால், அதிலிருந்து வெளி யேறும் நச்சுக் காற்றை சுவாசிக்க வேண்டிய உள்ளது. இதனால், பலருக்கு சுவாசக் கோளாறு, நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகிறன்றன.
போளூர் சாலையில் உள்ள தமிழ்நாடு உணவகம் அருகே உள்ள காலி இடத்திலும் திருக் கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள காலி இடத்திலும் குப்பையைவிட இறைச்சி கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. நள்ளிரவில் இறைச்சி கழிவுகளை வியாபாரிகள் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
கழிவுகள் நீண்ட நாட்களாகியும் அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி செல்பவர்களால் நீண்ட நேரம் நடைபயிற்சி செய்ய முடியாமல் திரும்பி விடுகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள் ளோம். ஆனால், அவர்கள் தங்கள் கடமையில் இருந்து அதிகாரிகள் பின்வாங்குவதால், பிரதமர் கொண்டு வந்து ‘தூய்மை இந்தியா திட்டம்’ என்பது கனவு திட்டமாகவே இருக்கும்.
திருவண்ணாமலை நகரம் என்பது ஆன்மிக நகரமாகும். இந்த தலத்துக்கு வரும் பக்தர் களுக்கு தூய்மையான காற்று மற்றும் சுகாதாரத்தை கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றவேண்டும். திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்திருக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
இதுகுறித்து நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, “அண்ணா நுழைவு வாயில் அருகே கொட்டப்பட்டிருந்த குப்பை தரம் பிரித்து மக்கும் குப்பை மீது செடி மற்றும் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி நிறைவு பெற்றதும், துர்நாற்றம் வீசுவது மற்றும் குப்பையை தீயிட்டு கொளுத்துவதால் வெளியாகும் நச்சுக் காற்று இருக்காது. அதற்காக சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள காலி இடத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக மக்களும் தெரிவித்துள்ளனர். தீபத் திருவிழாவையொட்டி, திருக் கோவிலூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்து வதற்காக, அந்த இடம் சுத்தம் செய்யப்படுகிறது. 2 காலி இடத் திலும் இறைச்சி கழிவுகளை மீண்டும் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago