போக்குவரத்து சிக்னல் அமையுமா?
பள்ளிக்கரணையில் தனியார் பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. வாகனங்களும் வேகமாக செல்கின்றன. சாலையை மாணவர்கள் கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அந்த சாலையில் சிக்னல் ஒன்றை அமைக்க வேண்டும்.
- தேவா, பள்ளிக்கரணை.
குவிந்து கிடக்கும் குப்பை
சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலை - ஜோன்ஸ் சந்து சந்திப்பில் சென்னை மாநகராட்சி மூலம் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தொட்டிகளில் நிரம்பி, சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகள் தெருவை அடைத்துக்கொண்டிருப்பதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி துப்புரவு ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தால், தகாத வார்த்தைகளால் பேசுகிறார். எனவே, அப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.ரகுநாதன், சைதாப்பேட்டை.
பராமரிப்பில்லாத கழிவறை
தியாகராய நகர் பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் உரிய பராமரிப்பின்றி, பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளன. இதனால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவறைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலகிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்
பேருந்து வசதி வேண்டும்
ஆவடியில் இருந்து பூந்தமல்லி, பெரும்புதூர், சிங்கபெருமாள்கோவில் வழியாக செங்கல்பட்டு செல்ல பேருந்து வசதியே இல்லை. இந்த வழியில் பயணிப்போர், 2-க்கும் மேற்பட்ட பேருந்துகளைப் பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த வழித் தடத்தில் புதிய பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்.
- வாசகர், சிங்கபெருமாள்கோவில்.
குப்பைகள் அகற்றப்படுமா?
வண்டலூர் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்துக்கு அருகில் தற்போது அதிக அளவில் குப்பைகள் கொட்டப் பட்டு வருகிறது. இதைத் தடுக்க வண்டலூர் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு குப்பை கள் கொட்டப்படுவதால், அதன் அருகில் உள்ள நீர்நிலையும் மாசுபடுகிறது. எனவே, அப் பகுதியில் குப்பைகள் கொட்டப் படுவதை தடுத்து, நீர்நிலையைப் பாதுகாக்க வேண்டும்.
- வாசகர், வண்டலூர்.
சாதாரண பேருந்துகள் இயக்க வேண்டும்
ஐயப்பன்தாங்கல் - வடபழனி இடையே இயக்கப்படும் பேருந்துகள் (வழித்தட எண்.26) அனைத்தும் சொகுசுப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. அவை அந்த வழித்தடத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் பயணிகள் பலர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் சாதாரண பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.பாலசுப்பிரமணியன், ராயப்பேட்டை
ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?
பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரியில் தூர் வார வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை நீதிமன்ற உத்தரவை பல்லாவரம் நகராட்சி அமல்படுத்தவில்லை. அதனால், அந்த ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரியில் தூர் வாரி, அதிக நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாசகர், குரோம்பேட்டை.
‘தி இந்து’வுக்கு நன்றி- கூடுதல் பேருந்துகள் இயக்கம்
செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக புகார் தெரிவித்திருந்தேன். அது அண்மையில் செய்தியாக வெளிவந்திருந்தது. அதைத் தொடர்ந்து, அந்த வழித்தடத்தில் தற்போது கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ‘தி இந்து’ நாளி தழுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- விநாயகம், சிங்கபெருமாள்கோவில்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago