வீணாகும் குடிநீர்
வேலூர் மாவட்ட ஆட்சியர் பங்களா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து பல மாதமாகின்றன. குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும் இந்நேரத்தில் உடைந்த குழாயை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யவேண் டும்.
-அசோகன், வேலூர்.
இரும்பு வளைவு சேதம்
திருவண்ணாலை செங்கம் சாலையில் ஆதிசேஷன் நகர் உள்ளது. இந்தப் பகுதியில் கனரக வாகனம் செல்லாமல் இருக்க இரும்பால் ஆன வளைவு அமைத்தனர். ஆனால், அதிக பாரம் ஏற்றிய கனரக வாகனங்கள் மோதியதில் இரும்பு வளைவு சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
இந்த வழியாகத்தான் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் வந்து செல்கின்றனர். ஆனால், அதை அகற்றி சரி செய்ய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரும்பு வளைவை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோல, இந்தப் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் சாலையோரத்திலேயே தினமும் ஆடுகளை வெட்டுகின்றனர். சாலையிலேயே ரத்தம் உறைந்துள்ளதால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் மனவேதனைப் படுகின்றனர். ஆடுகளை கடையினுள் வெட்டலாம் அல்லது வேறு இடத்தில் வெட்டி வந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- நாராயணன், திருவண்ணாமலை.
குடிநீர் வசதி வேண்டும்
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கலைக் கல்லூரி அருகே நீதிமன்ற வளாகம் மற்றும் தனியார் பஞ்சு தொழிற்சாலை உள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் இந்தப் பகுதியில் பொது கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
-வாசகர், குடியாத்தம்.
சிதிலமடைந்த குடியிருப்பு வளாகம்
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் பின்புறம் அரசு குடியிருப்பு வளாகம் உள்ளது. கடந்த 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளது. கதவு, ஜன்னல் உள்ளிட்ட தளவாடங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இங்கு 91 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைக் கழிவுகளை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அகற்ற முன் வராததால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இங்குள்ள விளையாட்டுத் திடலில், போதிய உபகரணங்கள் இல்லாததால் புதர் மண்டி கிடக்கின்றது. இவற்றை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், திருப்பத்தூர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ஆம்பூர் பேருந்து நிலையம் உள்ளேயும், வெளியேயும் நடைபாதை வியாபாரிகள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, பேருந்து நிலையம் வெளியே சிறு, குறு வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர்.
இதனால், வாணியம்பாடியில் இருந்தும், வேலூரில் இருந்தும் வரும் பேருந்துகள் உள்ளே செல்ல வழியில்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.
இதனால், பேருந்து நிலையம் உள்ளே காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டியராஜன், ஆம்பூர்.
நோய் பரவும் அபாயம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு என இரண்டு வளாகங்கள் உள்ளன. இந்தக் கட்டிடங்களின் மேல்பகுதியில் இருந்து வரும் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன. அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.
-டேனியல், வேலூர்.
கோயில் இடம் ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் இடத்தை ஆக்கிரமித்து 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கோயில் முன்பு கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
- வாசகர், செங்கம்.
திறந்த வெளி கழிப்பறை
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சில வீடுகளில் தனிநபர் கழிப்பறை இல்லாததால், திறந்தவெளியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் சுகாதாரம் மேம்பட மத்திய அரசு பல வழிமுறைகளைக் கூறிவரும் நிலையில், திருப்பத்தூர் நகராட்சியில் இத்திட்டத்தை முழுமையாக இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
-சிலம்பரசன், திருப்பத்தூர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago