வேகத்தடையின் மீது செல்லாமல் சாலையோரமாகச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலை விபத்தை தடுக்கும் விதமாக சாலைகளில் போடப்பட்டுள்ள வேகத்தடையின் மீது ஏறிச் செல்லாமல் சாலையோரமாகச் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் அரியலூரைச் சேர்ந்த வாசகர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், வாகனங்களின் வேகத்தை குறைக்கும் விதமாகவும் தொடர் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வழியே வரும் பேருந்துகள் அந்த வேகத்தடையின் மீது ஏறிச் செல்லாமல் சாலையோரமாக இறங்கிச் செல்கின்றன.
மேலும், அப்பகுதியில் உள்ள தெருவில் இருந்து சாலைக்கு நடந்து வருவோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவோர், பேருந்து மோதிவிடுமோ என்ற அச்சத்திலேயே அப்பகுதியைக் கடக்க வேண்டியுள்ளது.
எனவே, அந்த இடத்தில் தடுப்புகள் அல்லது கற்களை வைத்து, பேருந்துகள் சாலையை விட்டு கீழே இறங்கிச் செல்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பராமரிப்பில்லாத மின்பாதைகளால் அடிக்கடி ஏற்படும் மின்தடை
திருவாரூர் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத மின்பாதைகளால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை ஹரிஹரன் கூறியபோது, “முத்துப்பேட்டை பகுதிக்கு மதுக்கூர் துணை மின் நிலையத் திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 6 மாதகாலமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. மின்கம்பிகள் தாழ்வாக தொங்குவதாலும் மரக்கிளைகளில் உரசுவதாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது” என்றார்.
மாங்குடி மருதவனம் முன்னாள் ஊராட்சித் தலைவர் வரதராஜன் கூறியபோது, “பள்ளங்கோவில் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கிராமங்களான மாங்குடி, மருதவனம், வெங்க நகர், குறிச்சி மூலை உள்ளிட்ட மின் வழித்தடப் பகுதிகளில் மரக்கிளைகளில் உரசி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. கடந்த மே மாதம் தாழ்வாக தொங்கிய மின்கம்பி உரசியதில் 3 மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதேபோல, மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் அருகில் 9 மாடுகள் உயிரிழந்துள்ளன. இது தொடராமல் இருக்க மாவட்டம் முழுவதும் மின் வழித்தடங்களைப் பராமரிக்க வேண்டும்” என்றார்.
கடம்பங்குடி சிவப்பிரகாசம் கூறியபோது, “மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும். தற்போது மழைக் காலமாக இருப்பதால் காற்றடிக்கும் போதெல்லாம் அச்சமாக உள்ளது” என்றார்.
இதுகுறித்து மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, “முத்துப்பேட்டையில் ஒரு துணை மின்நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு நிரந்தர இடம் ஒதுக்கித் தருவதற்கான கோப்புகள் தயார்நிலையில் இருந்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் துரித செயல்பாடுகளின்றி இத்திட்டம் நிறைவேறாமல் உள்ளது. இருப்பினும், தற்காலிகமாக சிறிய துணை மின் நிலையம் அமைக்க மின் வாரியம் பரிசீலித்து வருகிறது.
பள்ளங்கோவில் துணை மின் நிலையத்திலிருந்து உயர் மின் அழுத்தப் பாதையில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்காமல் இருக்க கூடுதல் மின்கம்பங்கள் பதிக்க ரூ.55 லட்சத்தில் திட்டம் தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன” என்றனர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago