உங்கள் குரல்: போக்குவரத்து நெரிசலில் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை

By செய்திப்பிரிவு



ஆக்கிரமிப்புகள், இரும்பு தூண்கள் அகற்றிட கோரிக்கை

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்பால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ‘தி இந்து’வின் உங்கள் குரல் தொலைபேசி எண்ணில் வாசகர் தங்கவேலு தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தங்கவேலு மற்றும் சிலர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் புதிய வீட்டுவசதிவாரியக் குடியிருப்பு, நீதிமன்றம், அரசு மகளிர் கலைக்கல்லூரி, தனியார் பள்ளிகள், மாவட்ட விளையாட்டு அரங்கம், தனியார் வங்கிகள் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், இந்தச் சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். சாலையின் இருபுறமும் சில இடங்களில் வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட இடமின்றி பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும். இதே போல் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு செல்லும் பாதைக்கு வழிக்காட்டும் வகையில் சாலையில் பெரிய அளவில் தகவல் பலகை வைத்துள்ளனர். இந்த தகவல் பலகையைத் தாங்கி நிற்கும் இரும்பு தூண்கள் மீது அடிக்கடி இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இந்த தகவல் பலகையை அகலப்படுத்த வேண்டும் அல்லது அங்கிருந்து அகற்ற வேண்டும்.

மேலும், மாவட்ட விளையாட்டு அரங்கம் செல்லும் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்பதால், புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல கால்வாய் அடைப்பினை தூர்வார வேண்டும்,’’ என்றனர்.

தலைவாசல் காய்கறி மார்க்கெட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க கமிஷன்; விவசாயிகள் ஆதங்கம்

பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக சில்லரை நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சேலம் மாவட்டத்தில் முக்கிய காய்கறி மார்க்கெட்டுகளில் கமிஷன் என்ற பெயரில் விவசாயிகளிடம் பணம் பறிக்கப்படுகிறது என ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசியில் வாசகர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆத்தூரை அடுத்த தலைவாசலில் செயல்படும் தினசரி காய்கறி மார்க்கெட்டில், இதுபோன்ற பிரச்சினை நிலவுகிறது என தேவியாக்குறிச்சியைச் சேர்ந்த வாசகர் குமரவேல் கூறியதாவது:

தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் தினமும் பல்வேறு வகையான காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தலைவாசல் வட்டாரத்தில் கடுமையான வறட்சி நிலவும் நிலையில், விவசாயிகள் கடனுதவி பெற்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் விவசாயம் செய்து, காய்கறிகளை விளைவித்து, மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து விட்டதால், காய்கறிகளை விற்பனை செய்ததன் மூலமாக கிடைத்த பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வழிதெரியாமல் தடுமாறுகின்றனர். இதனைப் பயன்படுத்தி சிலர் ரூ.500-க்கு ரூ.50, ரூ.1000-க்கு ரூ.100 என கமிஷன் பெற்றுக் கொண்டு சில்லரை நோட்டுகளை கொடுக்கின்றனர்.

மேலும், விவசாயிகளுக்கு கொடுக்க மாற்றுப் பணம் இல்லாத வியாபாரிகளிடம் இதேபோல கமிஷன் தொகை பெறுகின்றனர். வறட்சியால் துவண்டு கிடக்கும் விவசாயிகளிடம் இதுபோன்று முறைகேடாக பணம் பறிப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்