சாலையை ஆக்கிரமித்து கடைகள்
ராசிபுரம் ஆண்டகளூர்கேட் மேம்பாலத்திற்கு கீழ் செல்லும் சாலையில் கடை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவி வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.கார்த்திகேயன், வையப்பமலை.
போக்குவரத்து போலீஸார் விதிமீறல்
தருமபுரி நகரில் 4 சாலைகள் இணைக்கும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம், போக்குவரத்து போலீஸார் கட்டாய வசூல் செய்து வருகின்றனர். பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை.
- ஆனந்தன், தருமபுரி.
இணைப்புச் சாலைக்குள் பஸ் வருமா?
சேலம் - காரிப்பட்டி நெடுஞ்சாலையில் புறவழிச்சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் விபத்து ஏற்படுகிறது. இணைப்புசாலைகளுக்குள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும்.
- ரமேஷ், காரிப்பட்டி.
அதிக விலைக்கு விற்பனை
சேலம் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்படுகிறுது. அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றால் மட்டும் சில நாட்கள் அடங்கியிருக்கும் இந்த கடைக்காரர்கள் மீண்டும் அதிக விலைக்கு விற்பதையே தொடர்கின்றனர். வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினால் பல கடைக் காரர்கள் கூட்டாக இணைந்து தகராறு செய்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் அதிகாரம் இல்லையா?
- உமாசங்கர், சேலம்.
பூங்கா திறக்கப்படுமா?
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்துநிலையம் பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் கடந்த 2 மாதமாக பூட்டிய நிலையில் உள்ளது. இதை விரைவில் திறக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரபாஸ், பெருந்துறை.
கூடுதல் கட்டணம் வசூல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர் நகர் மற்றும் வசந்தம் பார்க் பகுதியில் புதிய கேபிள் இணைப்புக்கு விதிமுறை மீறி கூடுதல் முன்பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- ராம், பெருந்துறை.
துர்நாற்றம், சுகாதார சீர்கேடு
திருச்செங்கோடு பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதியில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் சிறுநீர் கழிப்பதை தடை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பூபதிராஜா, திருச்செங்கோடு.
சாலையில் தேங்கும் கழிவு நீர்
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் எஸ்.பட்டி கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால் குடியிருப்புகளை ஒட்டியும், சாலையிலும் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு, நோய்த் தொற்று ஏற்படுகிறது.
- காளிதாசன், எஸ்.பட்டி, தருமபுரி.
பள்ளி அருகே டாஸ்மாக் கடை
தருமபுரி பேருந்து நிலையம் அருகில் சீனிவாசராவ் சாலை, செங்கொடிபுரம் ஆகிய பகுதிகளில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த இரு சாலை யிலும் 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனை, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளது. மது அருந்துவோர் இவ்விரு பகுதியிலும் இடையூறு செய்வதால் மாணவியரும், மருத்துவமனைக்கு வரும் மக்களும் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இந்தக் கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஷங்கர், தருமபுரி.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago