சமூக மாற்றம் நிகழ்ந்திட தமிழர்களின் அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும்: காஞ்சிபுரம் வாசகர் திருவிழாவில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

வாசகர் திருவிழா 2016 | காஞ்சிபுரம்

சமூக மாற்றம் ஏற்பட தமிழர்களின் அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் வலியுறுத்தினார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் முக் கிய நகரங்களில் வாசகர்களின் அமோக ஆதரவுடன் வாசகர் திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஓசூர், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் வாசகர் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா காஞ்சிபுரம் நக ராட்சி அலுவலகம் எதிரேயுள்ள அண்ணா கலையரங்கில் நேற்று நடைபெற்றது. பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இறைவணக்கமும், அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட, விழா இனிதே தொடங்கியது.

‘தி இந்து’ ஆசிரியர் கே.அசோகன் வர வேற்று அறிமுகவுரை ஆற்றினார். முதுநிலை பொது மேலாளர் வி.பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழா வில், தமிழக அரசின் அறிவியல் நகரம் துணைத் தலைவர் உ.சகாயம், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர் தம்பி ராமையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசியதாவது: தலைவர்கள் தொண்டர் களுக்கு நடத்தும் விழா போல, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கும், ஆட்சியாளர்கள் தங்கள் மக்களுக்கும் நடத்தும் விழா போல, ‘தி இந்து’ ஆசிரியர் குழு தங்களின் வாசகர்களுக்கு உணர்வுப்பூர்வமாக நடத்தும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது.

தேச விடுதலைக்காக தொடங்கப்பட்ட ‘தி இந்து’ நாளிதழ், தமிழ்ச் சமூகத்தின் சமூக இதழாக இருந்து வருகிறது. ‘நான் அளிக்கும் செய்தியை நீ படி’ என்ற நிலை இல்லாமல் ‘உனக்கு என்ன வேண்டும் நீயே சொல், நான் உனக்கு அதை தருகிறேன்’ என்ற உணர்வுடன் இருந்து வருகிறது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்.

தலைமைப் பண்பு பயிற்சிக்காக பெங்களூரு சென்றிருந்தேன். மத்திய அரசு அதிகாரிகள், ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள். திடீரென இந்திக்கு போய்விடுவார்கள். அப்போது நான் இந்தி புரியவில்லை என்று சொன்னேன். இந்தி தேசிய மொழிதானே நீங்கள் அதை படிக்கலாம் அல்லவா என்று அந்த அதி காரிகள் என்னிடம் தெரிவித்தபோது, ‘இந்தி தேசிய மொழி அல்ல. அது ஆட்சிமொழி; அவ்வளவுதான். எங்கள் தேசிய மொழி தமிழ்’ என்றேன்.

தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சரவணன், நான் இருக்கிறேன் என்று எனக்கு துணையாக பேசினார். நாங்கள் தமிழால் இணைந்தோம். தமிழ் எங்களை இணைத் தது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தமிழர்களை இணைத்துள்ளது.

நான் ஐஏஎஸ் அதிகாரியாக ஆகியி ருக்காமல், ஒரு நாளிதழின் ஆசிரியராக மாறியிருந்தால் இந்த தமிழ்ச் சமூகத்துக்கு என்னென்ன செய்திகளை, தகவல்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்திருப் பேனோ அவற்றை எல்லாம் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வழங்கிக்கொண்டு இருக்கிறது.

பத்திரிகைகள் செய்திகளை உண்மை யாகவும், தைரியமாகவும் வெளியிட வேண் டும். அந்த பணியை ‘தி இந்து’ சிறப்பாக செய்து வருகிறது. நம் நாட்டில் படித்த வர்கள், சிந்தனையாளர்களிடம் அறச்சீற்றம் ஏற்பட்டால் இந்த சமூகத்தையே புரட்டிப் போட்டுவிடலாம். ஆனால் படித்தவர்கள் சுயநலம் மிக்கவர்களாக, தைரியமற்ற வர்களாக உள்ளனர்.

தமிழர்களிடம் அடிமை உணர்வு இருக் கிறது. தமிழில் கையெழுத்து போட தயங்கு கிறார்கள். சமூக மாற்றம் ஏற்பட வேண்டு மானால் தமிழர்களின் அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும். இளைஞர்கள் அடிமை உணர்வில் இருந்து மீண்டெழ வேண்டும் என்று உ.சகாயம் பேசினார்.

நிகழ்ச்சியில் முகவர்கள், துணை முகவர்கள் கவுரவிக்கப்பட்டனர். ‘தி இந்து’ வாசகர்கள் தங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டனர். நிறைவாக, ‘தி இந்து’ சென்னை மண்டல பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.

இந்த விழாவை ‘தி இந்து’வுடன் லலிதா ஜுவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், காஞ்சிபுரம் எஸ்எம் சில்க்ஸ், செங்கல்பட்டு வித்யாசாகர் கல்விக் குழுமம், ஹோட்டல் ஜெயபாலா இண்டர்நேஷனல்,  சப்தகிரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங்கின.

நிகழ்ச்சியில், எஸ்எம் சில்க்ஸ் உரிமையாளர் மனோகரனை ‘தி இந்து’ வணிகப் பிரிவு தலைவர் ஷங்கர் சுப்ரமணியம் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும், ‘மை’ டிவி உரிமையாளர் மூர்த்தி உள்ளிட்டோரும் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. வாசகர் திருவிழாவை ஒட்டி ‘தி இந்து’ பதிப்பக நூல்கள் வாசகர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமான வாசகர்கள் நூல்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். வாசகர் திருவிழா நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மை டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

படங்கள்: க.ஸ்ரீபரத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்