மத்திய பேருந்து நிலையம், இட நெருக்கடியில் சிக்கித் தவிப் பதால் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மலை யைச் சேர்ந்த கட்டிடப் பொறியா ளரும் வாசகருமான செந்தில் குமார் என்பவர், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “தி.மலை மத்திய பேருந்து நிலையம் 3.60 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. ஒரே நேரத்தில் 48 பேருந்துகளை மட்டுமே நிறுத்தும் வசதிக் கொண்டது.
மக்கள்தொகை மற்றும் அண் ணா மலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பேருந்துகளின் எண்ணிக்கை உயர்ந்தது. சுழற்சி முறையில் 1,000 பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையம் இடநெருக் கடியில் இயங்குகிறது. அதன் எதிரொலியாக, மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பேருந்துகள் வருவதால், மத்திய பேருந்து நிலையம் செயல்படாது. நகருக்கு வெளியே தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் அவதிப் படுகின்றனர். இதையடுத்து, ரூ.16 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடங்களை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்தது. அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள ஈசான்ய லிங்க பகுதி (குப்பை கிடங்கு), ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், நாயுடுமங்கலம் உட்பட 5 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டன. அதில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சரியாக இருக்கும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பேருந்துகள் சுற்றுவட்ட புறவழிச் சாலை மூலமாக நகருக்குள் நுழை யாமல் ஒழுங்குமுறை கூடம் அமைந்துள்ள இடத்துக்கு வந்து சேரும். இதனால், நகரில் போக்குவரத்து பாதிப்பு இருக் காது என்று கருதினர். கடந்த 2015 ஜுன் மாதம் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், ஒழுங்குமுறை விற் பனைக் கூடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான தீர் மானம் கொண்டு வரப்பட்டும் பலனில்லை. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
முதல்வரின் அவசர அழைப்பு மையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்களது வழிகாட்டுதலின் பேரில் சம்பந் தப்பட்டவர்களை கேட்டபோது, ‘5 இடங்கள் பார்வையிட்டும் முடிவு எட்டவில்லை’ என்றனர். வடக்கு மற்றும் தெற்கு திருவண் ணாமலையை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு 50 பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. புதிய பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக, தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம், அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது. ஒரு தரப்பு வரவேற்கிறது என்றால், மற்றொரு தரப்பு எதிர்க்கிறது. இதனால் தீர்வு காண முடியவில்லை. ஆட்சியர் தலையிட்டால்தான் வழி பிறக்கும்” என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
3 days ago
மற்றவை
16 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago