இருசக்கர வாகனங்களால் ஆபத்து
மதுரை பெரியார் பேருந்து நிலையத்துக்குள் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள் தாராளமாக சென்று வருகின்றனர். இதனால் பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுநர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, விபத்துகளை தவிர்க்க பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் இந்த வாகனங்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஜலால், விளாச்சேரி, மதுரை.
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை
புனித தலமான ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நாய்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் ரயில் பயணிகளுக்கு இவை மிகவும் அச்சுறுத்தலாக உள்ளன. ரயில் நடைமேடை பகுதிகளில் இவை அதிகளவில் திரிந்துகொண்டிருப்பதால் உடனடியாக இவற்றை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.அப்துல்காதர், பரமக்குடி.
தாமதமாக திறக்கப்படும் நூலகம்
தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள கிளை நூலகம் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுவதில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாசகர்களுக்கு தேவையான நூல்களும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் நூலகத்தை திறந்து, வாசகர்களுக்கு தேவையான நூல்களை வழங்க நூலகத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேதாஜி, சின்னமனூர்.
சீமைக்கருவேல மரங்களால் பாம்பு பயம்
மதுரை திருப்பாலை பொறியாளர் நகர் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் நிறைய வளர்ந்துள்ளன. இதனால் இங்கே ஏராளமான பாம்புகள் வசித்து வருகின்றன. எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனாள், திருப்பாலை, மதுரை.
கேபிள் இணைப்புக்கு கூடுதல் கட்டணம்
இணைப்புக்கு என ரூ.75 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் அரசு கூறியுள்ளது. ஆனால் மதுரையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ. 130 வரை வசூல் செய்யப்படுகிறது.
கேபிள் பாலாஜி, மதுரை.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் இருந்து கமுதி, அருப்புக்கோட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அதிகமாக தூசி பறப்பதால் வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஷாஜகான், பார்த்திபனூர்.
பழுதான கழிவுநீர் கால்வாய்
மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக பழுதாகியுள் ளது. இதனால் ஹோட்டல், நிறுவனங்களின் கழிவுகள் இந்த கால்வாயிலேயே தேங்கிவிடுகின்றன. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
சந்தனராஜ், மதுரை.
தகவல் பலகையை மறைக்கும் நோட்டீஸ்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 3 ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களை ஓட்டும்போது வாகன ஓட்டிகள் சாலையைப் பார்க்க முடியவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகிறது. எனவே, இதுபோன்ற நோட்டீஸ்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒய்.பக்கீர்முகமது, காரைக்குடி.
பிளாஸ்டிக் எரிப்பு புகையால் அவதி
மதுரை மாவட்டம், எஸ்.ஆலங்குளம் அருகே உள்ள குமரன்நகர் பகுதியில் இரு நாட்களுக்கு ஒருமுறை பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கின்றனர். இதனால் பொதுமக்களும், குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கண் எரிச்சல் போன்ற உடல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சுற்றுப்புறச் சூழல் மாசுபாடும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
கே.செல்வி, ஆனையூர்.
ஓராண்டில் பெயர்ந்த சாலை
விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை உள்ள சாலை ஓராண்டுக்கு முன்புதான் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ரத்தினவேல், வில்லிபுத்தூர்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago