உங்கள் குரல்: நாகப்பட்டினத்தில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் விநியோகம்

By செய்திப்பிரிவு

சாக்கடை நீர் கலந்த குடிநீர் விநியோகம்

நாகப்பட்டினம் நகரில் விநியோகிக்கப்படும் குடிநீரில், பல இடங்களில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சரிசெய்யப்படவில்லை. இதனால், சுகாதாரமற்ற குடிநீரை அருந்தும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, அதிகாரிகள் இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

-சீனுவாசன், நாகப்பட்டினம்.

புதுகையில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மேற்கு 6-ம் வீதியில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால், சீரான குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.

- சுவாமிநாதன், புதுக்கோட்டை,

சாலையோர பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பலூரிலிருந்து அரியலூர், தஞ்சாவூர் வழியாக மானாமதுரை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, பெரம்பலூரிலிருந்து அரியலூர் வரை இந்த சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இதனால் இந்த சாலை வழியே செல்லும், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. இதுபோல பள்ளம் உள்ள பகுதிகளில் ஒளிரும் பட்டைகள் அல்லது தடுப்புகள் அமைத்தால் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்லவும், விபத்து நேரிடாமல் தவிர்க்கவும் வசதியாக இருக்கும்.

-நாராயணசாமி, அரியலூர்.

போலீஸாரின் கண்காணிப்பு வேண்டும்

அரியலூரில் வஉசி நகர், சிவன் கோயில் தெரு பிரிவு இடத்தில் சமூக விரோதிகள் சிலர் தினமும் மது அருந்திவிட்டு, அவ்வழியே செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலரையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், வம்புக்கு இழுப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. எனவே, இப்பகுதியில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க, அப்பகுதியில் போலீஸாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

-மருதமுத்து நாராயணசாமி, அரியலூர்.





‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்