உங்கள் குரல்: ஆத்தூரில் நடைபாதை வசதி இல்லை

By செய்திப்பிரிவு

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் கட்டிகானப்பள்ளி கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் கடந்த இரு ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பழுதடைந்துள்ளது. மேலும் தண்ணீர் விநியோகம் இல்லாமல், சுகாதார வளாகத்தை பயன்படுத்த பெண்கள் சிரமப்படுகின்றனர். சுகாதார வளாகத்தை பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிருஷ்ணன், கட்டிகானப்பள்ளி.

ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

நாமக்கல் உழவர் சந்தை அமைந்துள்ள பூங்கா சாலையை ஆக்கிரமித்து காலை வேளையில் கடை அமைக்கப்படுவதால் அவ்வழியாக வாகனப் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் நிலவி வருகிறது. ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும்.

- எம்.குமரன், முல்லைநகர்.

மதிக்கப்படாத கட்டுப்பாட்டுக்கோடு

சேலம் செரி ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் எதிரே போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் நின்று செல்வதற்கு கட்டுப்பாடு கோடு வரையப்பட்டுள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் கட்டுப்பாடு கோட்டினை மதிப்பதில்லை. மேலும், மாநகராட்சி அலுவலகத்துக்குள் எவரும் செல்ல முடியாதபடி வாகனங்கள் சாலையை அடைத்துக் கொண்டு நிற்பதால் பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் தினமும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து போலீஸார் கட்டுப்பாடு கோட்டினை மதிக்காத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

- பா.இளமதி, முள்ளுவாடி, சேலம்.

குளத்தில் முட்புதர்கள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள கோயில் தெப்பக்குளம் பல லட்ச ரூபாய் செலவில் அண்மையில் சீரமைக்கப்பட்டது. இந்த குளத்தை சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனை அகற்றி குளத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

- சாந்தகுமார், திருச்செங்கோடு.

கழிப்பிட வசதி தேவை

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் பொது கழிப்பிட வசதியின்றி இங்கு வசிக்கும் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

- அன்பரசன், ஆத்தூர்.

நடைபாதை வசதி இல்லை

சேலம் செரி ரோட்டில் அரசு கலைக்கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் சாலையைக் கடந்து மறுபுறம் செல்ல பாதுகாப்பான ஏற்பாடு இல்லாமல் உள்ளது. கல்லூரி வகுப்புகள் தொடங்கும்போதும் முடிவடையும்போதும் சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துவிடுகிறது. அப்போது மாணவர்களும் பொதுமக்களும் சாலையைக் கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பாதுகாப்பாக சாலையை கடக்கும் வசதியை மாநகர போக்குவரத்து போலீஸார் ஏற்படுத்தித் தர வேண்டும்.

- ஜி.மேகலா, குமாரசாமிப்பட்டி, சேலம்.

மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலில் இருந்தபோதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்ததாக தெரியவில்லை. இதனால் சுற்றுச்சூழலும், வன விலங்குகளும் பாதிக்கப் படுகிறது. இயற்கையை காப்பதில் ஒவ்வொரு தலை முறைக்கும் பங்கு உள்ளது என்பதை பொதுமக்களும் உணர வேண்டும். அதிகாரிகளும் அதிகபட்ச நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.

- ஜெ.காமராஜ், தருமபுரி.

வேகத்தடை வேண்டும்

ஆத்தூரில் ராசிபுரம் - சேலம் பிரிவு சாலையில் சிக்னல் இல்லாததால் வாகனங்கள் கட்டுப்பாடுன்றி செல்கின்றன. இதனால் அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே ராசிபுரம் - சேலம் பிரிவு சாலையில் வேகத்தடை அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

- என். முருகேசன், விநாயகபுரம், ஆத்தூர்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்