தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடை அமைக்கப்படுவதால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாவதாக, ‘தி இந்து- உங்கள் குரல்’பகுதியில் அரியலூரைச் சேர்ந்த வாசகர் திருமுருகன் பதிவு செய்துள்ளார்.
அரியலூரிலிருந்து திருச்சி சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தொலைவு தேசிய நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சிக்கு தினமும் காலை மாலை வேளைகளில் அலுவலக வேலையாகவும், தனிபட்ட வேலையாகவும் பல பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
மேலும் வயது முதிர்ந்தோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அரியலூரிலிருந்து திருச்சிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் அரியலூருக்கும், திருச்சிக்கும் இடையே ஒரு கிராமத்துக்கு 2, 4 என்ற கணக்கில் பல வேகத்தடைகள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வேகத்தடைகளால் விபத்து எண்ணிக்கை குறைகிறது என மாவட்ட நிர்வாகம் கூறினாலும், இந்த வேகத்தடைகளால் தொடர்ந்து விபத்துகளும், போக்குவரத்து பாதிப்பும், பயணிகளுக்கு கடும் அவதியும் ஏற்படுகிறது. எனவே, வேகத்தடைகளுக்குப் பதிலாக வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் விதமாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வாசகர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தஞ்சையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “உச்ச நீதிமன்றத்தால் டெல்லி தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட உத்தரவில், விபத்துகள் நேரிடும் இடங்களைக் கண்டறிந்து வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் விதமாக சாலைகளில் ஆபத்தில்லாத வகையில் சாலையின் குறுக்கே அடுத்தடுத்து வண்ணப் பட்டைகள்(RUMPLED STRIPS) அமைக்கவேண்டும். அதன்பின் நேரிடும் விபத்துகள் குறித்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், சாலையில் அடுத்தடுத்து வண்ணப் பட்டைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தற்போது விபத்துகள் நேரிடுகிறதா?, உயிர் பலி ஏற்படுகிறதா? என கண்காணிக்கப்பட்டதில், தற்போது உயிர் பலி ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.
மேலும், வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனத்தை இயக்கினால் விபத்துகள் நேரிடுவது முற்றிலும் தடுக்கப்படும்” என்றார்.
************
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் தொலைபேசி எண்கள்
சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago