உங்கள் குரல்: கோவை மருத்துவக் கழிவுகள்- அலுவலர்களுக்கு தண்டனை தேவை

By செய்திப்பிரிவு

அலுவலர்களுக்கு தண்டனை தேவை

25 லாரிகளில் மருத்துவக்கழிவுகள் கோவைக்கு கொண்டு வரப்பட்டது தொடர்பாக, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கக்கூடாது. பொள்ளாச்சி, உடுமலை, கோவை பகுதியில் சோதனைச்சாவடிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குற்றத்துக்கு துணைபோகும் அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஜெயமோகன், கோவை.

மாணவர்கள் புகார் எண்?

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பாடங்களை முன்கூட்டியே எடுக்கிறார்கள். இது தொடர்பாக கல்வித்துறை அலுவலர்கள் புகார் அளிக்கலாம் என்கிறார்கள். ஆனால் எங்கு புகார் அளிப்பது என்பது பற்றிய விவரங்கள் சொல்லப்படுவதில்லை. மாணவ, மாணவிகள் புகார் அளிக்க, ஏதுவாக மாவட்டத்தில் மாணவர்கள் குறைதீர் எண் ஒன்றை கல்வித்துறை அலுவலர் ஏற்படுத்த வேண்டும்.

விமல், திருப்பூர்.

வாகனம் நிறுத்த மேற்கூரை?

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கட்டிடத்தின் வலதுபுறம் வாகனங்கள் பகல் முழுவதும் வெயிலில் காய்கின்றன. ஆகவே அப்பகுதியில் வாகனங்களை நிறுத்த ஏதுவாக மேற்கூரை அமைக்க வேண்டும்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கட்டிடத்தின் வலதுபுறம் வாகனங்கள் பகல் முழுவதும் வெயிலில் காய்கின்றன. ஆகவே அப்பகுதியில் வாகனங்களை நிறுத்த ஏதுவாக மேற்கூரை அமைக்க வேண்டும்.

சே.பாலு, திருப்பூர்.

திறந்த வெளியில் உபாதை

திருப்பூர் பழைய பேருந்துநிலையம் பகுதியில் கோவை பேருந்துகள் நிற்கும் பகுதியில், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பலரும் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆகவே, சிறுநீர் கழிக்காத வகையில் அங்கு புல் வளர்த்து பராமரித்தால், சுகாதாரம் பாதுகாக்கப்படும்.

மணிகண்டன், பல்லடம்.

வீட்டு வாடகை முறைப்படுத்தப்படுமா?

கோவையில் சிறிய வீடுகளுக்குக்கூட அதிக வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, வீடுகளின் கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலட்சுமி, கோவை.

பேருந்து நிறுத்தம் கண்டறிவதில் சிரமம்

திருப்பூர், கோவை மாவட்டங்களில் அரசுப் பேருந்துகளில் பக்கவாட்டு பகுதியில் ஊர்ப்பெயரை குறிப்பிடும் இடத்தில் இரண்டு பக்கமும் அதிகளவில் விளம்பரம் செய்து வைத்துள்ளனர். இதனால் இரவில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு பேருந்து நிறுத்தம் கண்டறிவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, இதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

வெங்கடேஷன், உடுமலைப்பேட்டை.

விளக்குகள் எரிவதில்லை

தாராபுரம் ஐந்து முக்கு பகுதியில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதில்லை. அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

அதேபோல், அங்குள்ள நூலகம் அருகே பலரும் இயற்கை உபாதை கழிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆகவே இவற்றை தாராபுரம் நகராட்சி நிர்வாகம் களைய வேண்டும்.

முகமது ரபிக், தாராபுரம்.

கருவூலத்தில் சலான் இல்லை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு கருவூலத்தில் பொதுமக்கள் பணம் செலுத்தச் சென்றால் அங்கு, பணம் செலுத்தும் சலான் இல்லை. மாவட்ட நிர்வாகம் இலவசமாக வழங்க வேண்டிய சலான் படிவத்தை, பொதுமக்கள் ரூ.10 செலுத்தி அருகில் உள்ள கடைகளில் வாங்க வேண்டியுள்ளது. ஆகவே சலான் படிவங்களை போதிய அளவில் வைத்து, பொதுமக்களுக்கு தேவையற்ற பண விரயத்தை தவிர்க்க வேண்டும்.

சு.மனோகரன், குன்னூர்.

கூடுதல் கட்டணம் வசூல்

கோவை ரயில் நிலையம் முன்புள்ள நகலகங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், குளிர்பானங்கள் விற்பதில் தொடங்கி, கழிவறை வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவேகானந்தன், கோவை.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்