பொதுத்துறை வங்கிக் கிளைகளை கூடுதலாக திறக்க வேண்டும்
மேற்கு சைதாப்பேட்டையில் அரசு பொதுத்துறை வங்கிகள் கூடுதலாக கிளைகளை அமைக்க வேண்டும் என வாசகர் ஒருவர் உங்கள் குரலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, மேற்கு சைதாப் பேட்டையைச் சேர்ந்த ஆர்.எத்தி ராஜன் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தொடர்பு கொண்டு கூறியதாவது:
மேற்கு சைதாப்பேட்டை பெரு மாள் கோயில் தெரு, விஎஸ்.முதலி தெரு, சுப்பிரமணிய முதலி தெரு, கொத்தவால் தெரு போன்ற 50-க் கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரக் கணக்கானோர் வசித்து வருகின் றனர். மேற்கு சைதாப்பேட்டையில் 2 பொதுத்துறை வங்கிகளின் கிளைகள் மட்டும்தான் உள்ளன. அவையும் வெகுதொலைவில் அமைந்துள்ளன. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த இரு வங்கிக் கிளைகளிலும் எந்நேரமும் கூட்டம் காணப்படுகிறது.
தற்போது பொதுமக்களுக்கு ஓய்வூதியம், மானியம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் வங்கிகள் மூலம் வழங்கப்படு கின்றன. இதனால் மக்களுக்கு வங்கித் தேவை அதிகளவில் உள்ளது. மேலும், மாணவர்களும் தங்களுடைய பள்ளி, கல்லூரி கல்விக் கட்டணங்களை வங்கி கள் மூலம் செலுத்தி வருகின்றனர். வணிகர்களும் தங்கள் வியாபாரத் துக்கு வங்கியை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, மேற்கு சைதாப்பேட்டையில் பொதுத்துறை வங்கிகள் சார்பில் கூடுதல் கிளைகளை அமைக்க வேண்டும்.
இவ்வாறு எத்திராஜன் கூறினார்.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இக்கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து மேற்கு சைதாப்பேட்டையில் கூடுதல் வங்கிக் கிளைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தேங்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு
கொரட்டூரின் பல பகுதிகளில் தேங்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக கொரட்டூரைச் சேர்ந்த வாசகர் எஸ்.மோகன்குமார் கூறியதாவது:
முன்பு அம்பத்தூர் நகராட்சியில் இருந்த கொரட்டூர் பகுதி, தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்து வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிந்து, வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் விவேகானந்தர் நகரில் உள்ள குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் உந்து நிலை யம் இயங்காததால், ஆள்நுழைவு குழிகள் வழியாக, கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர், டிவிஎஸ் நகர், அன்னை நகர், கோபாலகிருஷ்ணா நகர் போன்ற பகுதிகளில் காலி நிலத்தில் தேங்குகிறது. இதனால் மாசடைந்த நிலத்தடி நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றார்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியத்தின் 83-வது வார்டு பொறியாளரி டம் கேட்டபோது, “எங்கள் பகுதியில் அப்படி எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.
சாதாரண கட்டண பேருந்து சேவைகள் குறைப்பு
சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் சாதாரண கட்டண பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் நிசார் அகமது கூறியதாவது:
சென்னை மாநகரில் தற்போது வெள்ளை போர்டு (சாதாரண கட்டண) பேருந்துகளைப் பெருமளவில் குறைத்து விட்டார்கள். இதனால் பயணிகள் சொகுசு பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுப்பதுடன், தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தங்களில் இறங்க முடியாமலும் அவதிப்படுகிறார்கள். அதிலும் முதியோர்களின் நிலை மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறது. தங்கள் நிறுத்தங்களைவிட ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமாக நடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக 17டி எண் வழித்தடத்தில் சாதாரண பேருந்துகளை இயக்குவதே இல்லை. எழும்பூர் நிறுத்தம் பிறகு நேரடியாக சென்ட்ரலில் தான் நிற்கிறது. இதனால், பெரியமேடு பகுதிக்குச் செல்ல வேண்டிய பயணிகள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஒவ்வொரு வழித்தடத்திலும் கணிசமான அளவுக்கு சாதாரண கட்டண பேருந்துகளை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அனைத்து வழித்தடங்களில் சொகுசு பேருந்துகளுக்கு இணையாக சாதாரண பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பயணிகள் புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago