உங்கள் குரல்: தருமபுரியில் மது அருந்தும் இடம், குப்பை மேடாக மாறிய நூலக வாயில்

By செய்திப்பிரிவு

வாசகர்கள் குமுறல்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நூலகத்தின் முன்பகுதி மது அருந்தும் இடமாகவும், குப்பை மேடாகவும் மாறியிருப்பதால் நூலகத்திற்கு வருவோர் பாதிப்படைவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற வாசகர் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியது:

பென்னாகரம் வட்டத்தின் தலைமை நூலகத்திற்கு சற்று அருகே மதுக்கடை இருப்பதால் நூலகத்தின் முன்பாகவே பலரும் பகல் நேரங்களில் மது அருந்துகின்றனர். ஏறத்தாழ அப்பகுதி மது அருந்தும் பாராகவே மாறிவிட்டது. மது அருந்துவோர் அப்பகுதியில் கண்ணாடி பாட்டில்களை உடைப்பதும், அப்பகுதியை கடப்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவதும், நூலகத்தில் படிக்க வருவோர் பாதிப்படையும் வகையில் அதே பகுதியில் அமர்ந்தபடி பலத்த ஓசையுடன் பேசுவதும் என அத்துமீறி செயல்படுகின்றனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்புவோரிடம் சண்டையில் ஈடுபடுகின்றனர். இதனால், நூலகத்திற்கு வரும் புத்தக ஆர்வலர்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் மிகவும் பாதிப்படைகின்றனர். மது அருந்துவோரின் தொல்லையை கருத்தில் கொண்டு பலரும் நூலகத்திற்கு வருவதையே தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மது போதையில் சிலர் நூலகத்தின் முன்பே வாந்தியெடுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாலும் அப்பகுதி சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நூலகத்தின் முன்பு குப்பைகள் தொடர்ந்து அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதி குப்பை மேடாகவும் மாறியுள்ளது. சிறந்த சமூக மாற்றத்தையும், வளர்ச்சியையும் உருவாக்க உதவும் அறிவுத்திறனை வளர்க்கும் இடமான நூலகத்திற்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பு அதிகாரிகளும் அறிந்திருந்தபோதும் அவற்றை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நூலக பகுதியில் அமைதியான, அச்சமற்ற, சுகாதாரமான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

இவ்வாறு கூறினார்.





‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்