வேலூர் - திருவண்ணாமலை இடையே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலம் கட்டும் பணி: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

வேலூர் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ் சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணி களுக்காக, சாலையைக் கடக்கும் நீர்ப்பாசன கால்வாய்களை அகலப்படுத்தி பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. அந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வாசகர் ஒருவர் ‘தி இந்து ’உங்கள் குரல் சேவையில் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:

வேலூர் - தி.மலை தேசிய நெடுஞ் சாலையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியை வரவேற்கிறோம். அதற்காக, அந்தப் பணியை நீண்ட காலத்துக்கு செய் வதை ஏற்க முடியாது. அதில், குறிப் பிட்டு சொல்லவேண்டும் என்றால் நீர்ப் பாசன கால்வாய் மற்றும் பாலம் அமைக் கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறு கிறது. சாலையை 2-ஆகப் பிரித்து பாலம் கட்டப்படுகிறது. ஒரு பகுதியில் பணிகள் நடைபெற்றால், மற்றொரு பகுதியில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப் படுகிறது. ஒரு பகுதியில் பணி முடிந்ததும், மாற்றுத் திசையில் பணி மேற் கொள்கின்றனர். அதிகபட்சமாக 2 மாதங் களில் முடித்துவிடலாம். ஆனால் 6 மாதங் களாகியும் பணிகளை முடிக்கவில்லை.

இதனால், கால்வாய் மற்றும் பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை பரிதாபம். பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது என்ற எச்சரிக்கை பலகை கூட வைப்பதில்லை.

போளூர் புறவழிச்சாலை அருகே 2 இடங்களிலும், கேளூர் கிராமத்தில் ஒர் இடத்திலும், கண்ணமங்கலம் அருகே 5 இடங்களிலும் நீர்ப்பாசன கால்வாய் மற்றும் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. ஆமை வேகத்தில் பணி நடைபெறுவதால் அடிக்கடி இப்பகுதிகளில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கூறும்போது, “வேலூர் - திருவண்ணாமலை சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். அதில், நீர்ப்பாசனக் கால்வாய் மற்றும் பாலம் கட்டுவதற்காக சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் வெட்டி பணிகளை செய்து வருகின்றனர். மற்றொரு பாதியில் கருங்கற்களை கொட்டி வைத்துள்ளனர். இதனால், அந்த இடங்களை எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. இரவு நேரத்தில் முகப்பு விளக்குகளால் கண்கள் கூசும்போது, அச்சத்துடன் பேருந்துகளை இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. விபத்துகளைத் தவிர்க்க பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘ பணிகள் துரிதப்படுத் தப்படும்’’ என்றனர்.

************

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் தொலைபேசி எண்கள்

சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்