அன்புள்ள வாசகர்களே..
‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890003 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
சாலை சீரமைக்கப்படுமா?
திருப்பூர் மாவட்டம் புத்தரச்சல் -குங்குமம்பாளையம் சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாகவே இதே நிலை நீடிக்கிறது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் அன்றாடம் பாதிக்கப்படுகின்றனர். - நடராஜன், வரப்பாளையம், திருப்பூர்.
ஆசிரியர் கலந்தாய்வு?
தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பலரும் கொத்தடிமைபோல் நடத்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துவதுபோல், தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், ஊரின் அருகாமையில் உள்ள பள்ளியில் வேலை செய்ய இயலும். ஆசிரியர்களும் பயன்பெறுவார்கள். ஆகவே தனியார் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். - சுப்பிரமணியம், கோவை.
ஈங்கூரில் விபத்து அபாயம்?
திருப்பூர் சென்னிமலை -பெருந்துறை சாலை ஈங்கூரில் உள்ள பெரிய பாலத்தில் இரண்டு இடங்களில் இரும்புக் கம்பி உடைந்துள்ளது. இதனால் பெரிய வாகனங்களைப் பின் தொடரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, விபத்தை தவிர்க்கும் வகையில் உடைந்த இரும்புக் கம்பிகளை சீரமைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். - ஜீவானந்தம், திருப்பூர்
குப்பை அகற்றுவதில் சுணக்கம்?
பல்லடம் தினசரி சந்தை மற்றும் வாரச்சந்தை பகுதியில் குப்பையை அப்புறப்படுத்துவதில் தொடர்ந்து சுணக்கம் ஏற்படுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அப்புறப்படுத்துவதில் பல்லடம் நகராட்சி போதிய கவனம் செலுத்த வேண்டும். - கே.சகாயம், பல்லடம்.
ஆட்சியர் அலுவலக அவலம்?
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் உள்ள கழிவறைகளில் போதிய அளவு தண்ணீர் வருவதில்லை. இதனால் கழிவறையை அன்றாடம் பயன்படுத்துவோர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆதார் மற்றும் இ-சேவை மையங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் என, பலரும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். அதிலும், ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் மதியம் சாப்பிட்டுவிட்டு பாத்திரம் மற்றும் கைகழுவ முடியாமல் திண்டாடுகிறார்கள். கழிவறைகளில் போதிய தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். - சே.பாலசுப்பிரமணி, திருப்பூர்.
வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு?
கோவை மாவட்டம் சூலூர், கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் குறிப்பிட்ட 10 வார்டுகளில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் சேர்ப்பில் நடைபெற்ற இந்த முறைகேடுகளை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலதண்டாயுதம், கண்ணம்பாளையம்.
குண்டும், குழியுமான சாலை
உதகை யெல்சில், குமரன் நகர் பகுதியில் உள்ள சாலைகள் மிக மோசமாக உள்ளன. குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையில் தினமும் 100-க்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். விபத்து ஏற்படுத்தும் ஆபத்துள்ள இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
உதகை யெல்சில், குமரன் நகர் பகுதியில் உள்ள சாலைகள் மிக மோசமாக உள்ளன. குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையில் தினமும் 100-க்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். விபத்து ஏற்படுத்தும் ஆபத்துள்ள இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - பெயர் வெளியிட விரும்பாத வாசகர், உதகை.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள பொதுக்கழிப்பிடங்கள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. துர்நாற்றத்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - காந்திராஜன், உடுமலை.
பார்க்கிங் தொல்லை
உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்துவதால், பொதுமக்கள், நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் எளிதாகச் சென்று வர முடிவதில்லை. மருத்துவமனைக்கு எதிரே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வாகனங்கள் நிறுத்த உபயோகிக்கலாம். இதனால், பார்க்கிங் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். - சண்முகசுந்தரம், உடுமலை.
பேருந்துகள் இயக்கப்படுமா?
உடுமலை அரசு கலைக் கல்லூரி வழியாக போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால், அங்கு பயிலும் மாணவ, மாணவிகள், தினமும் 3 கி.மீ. தூரமுள்ள மத்திய பேருந்து நிலையத்துக்கு கால்நடையாக நடந்தே சென்று வரும் நிலை உள்ளது. இது குறித்து ஏற்கெனவே பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. - ராதாகிருஷ்ணன், உடுமலை.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago