உங்கள் குரல்: விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

பிள்ளையார்பட்டி கோயிலில் இருந்து பஸ் நிலையத்துக்கு தெரு விளக்கு வசதி செய்துதர வேண்டும்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநா யகர் கோயிலிலிருந்து புதிய பேருந்து நிலையத் துக்கு இடையிலான தொலைவுக்கு தெருவிளக்கு வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ‘தி இந்து’ உங்கள் குரல் மூலம் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கயல்விழி தி இந்து உங்கள் குரல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியது: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு தமிழகம் முழுவதுமிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் இருந்து சிறிது தூரத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலை யம் உள்ளது. இங்கு பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்லாமல் இடையிலேயே இறக்கிவிட்டுச் செல்கின்றனர். அனைத்து பேருந்துகளும் நிலையத்துக்குள் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு இரவில் பேருந்து நிலையம் செல்லும் வழியில் எந்த தெருவிளக்கு வசதியும் இல்லாததால் நடந்து செல்ல அச்சமாக உள்ளது. எனவே, கோயிலிலிருந்து பேருந்து நிலையம் வரையிலான இடைப்பட்ட தொலைவில் சாலையின் இருபுறமும் தெருவிளக்கு வசதி செய்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளிக்குள் போனஸ் கிடைக்குமா?

காரைக்குடி மண்டலத்தில் 4 ஆயிரத் துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இதுவரை தீபாவளி அட்வான்ஸ், போனஸ், கடந்தாண்டுக்கான நிலுவைத்தொகை வழங்கப்படாததால் தீபா வளியை கொண்டாட முடியாத தொழிலாளர்கள் கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலையில் உள்ளதாகவும், விரைந்து போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘தி இந்து’ உங்கள் குரல் மூலம் போக்குவரத்து தொழிலாளர்கள், அவரது குடும்பங்களைச் சேர்ந்த பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

அரசின் மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப் பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை.

தினமும் அரசுக்கு வருவாய் ஈட்டுவது போக்குவரத்து தொழிலாளர்கள்தான். ஆனால், எங்களுக்கு தீபாவளி முன்பணமாக ரூ. 5 ஆயிரம் வழங்கு வர். அத்தொகையும் இன்னும் வழங்கப்பட வில்லை. அதேபோல், அரசு அறிவித்த போனஸ் தொகையான ரூ. 16,800 இன்னும் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த போனஸ் நிலுவைத்தொகை ரூ. 8400-ம், தையல் கூலியும் வழங்காமல் தாமதம் செய்து வருகின்றனர்.

மற்றவர்களைப் போல எங்களது குடும் பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தீபாவளியை கொண்டாட புத்தாடைகள், பலசரக்கு சாமான்கள் வாங்குவதற்கு வழியின்றி உள்ளோம். வெளியில் கந்துவட்டிக்கு கடன் வாங்கி பண்டிகையை கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள குழந்தைகளின் மகிழ்ச்சியைக்கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம். போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இன்னும் போக்குவரத்துக் கழகத்தில் அட்வான்ஸ், போனஸ் வழங்கப்படவில்லை. கும்ப கோணம் மட்டு மின்றி, அனைத்து கோட்டங்களிலும் இந்த நிலை நீடிக்கிறது. சில நாட்களுக்குள் வழங்குவதற்கு அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகம் மூலம் நடத்தப்படும் தனி யார் வேலைவாய்ப்பு முகாம், விருதுநகரில் இம்மாதம் 31-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஹரிபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒவ்வொரு மாதமும், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம் மாதத்துக்கான முகாம் அக். 31-ம் தேதி சூலக்கரையில் உள்ள வேலைவாய்ப்பு அலு வலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இதில், 5 முன்னணி நிறுவனங் கள் கலந்துகொண்டு 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பார்மஸி, ஐடிஐ, டிப்ளமோ (எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவு மட்டும்) படித்தவர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் பணி பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பாதிக்கப் பட மாட்டாது.



‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்