உங்கள் குரல்: மதுரை பழங்காநத்தத்தில் அகற்றப்படாத சீமைக்கருவேல மரங்கள்

By செய்திப்பிரிவு

அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

044-42890004 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

விபத்துகளை ஏற்படுத்தும் சாலை

மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாவினிப்பட்டி செல்லும் வழியில் உள்ள சாவடி அருகே சாலை குறுகலாகவும், மிகவும் மோசமாகவும் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பயணிகள் மிகுந்த அச்சத்துடனேயே பேருந்தில் சென்று வருகின்றனர். எனவே, உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கயல்விழி, மேலூர்.

நாராயணபுரத்தில் அடிப்படை வசதியில்லை

மதுரை நாராயணபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளைச் சுற்றி கழிவுநீர் கால்வாய் ஓடுகிறது. இரவு முழுவதும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. வெளியில் இருந்தே குடிநீரை விலைக்கு வாங்குகிறோம். இரவில் விளக்குகளும் எரிவதில்லை. இந்த பிரச்சினைகளைக் களைய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலைராஜ், நாராயணபுரம்.

அகற்றப்படாத சீமைக்கருவேல மரங்கள்

மதுரை பழங்காநத்தம் பாலத்தின் இரு பக்கங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறாக உள்ளன. உடனடியாக இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், மதுரை

கண்டுகொள்ளப்படாத பேருந்து நிலையம்

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முறையாக செயல்படவில்லை. இரவு 10 மணிக்கு மேல் வந்தால் விருதுநகரில் பேருந்துகள் நிற்பதில்லை. திருநெல்வேலி, நாகர்கோவில் பேருந்துகள் பகல் நேரங்களில்கூட விருதுநகரில் நிறுத்தப்படுவதில்லை. அரசு போக்குரவரத்து கழக பணிமனையை புதிய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும்.

ராம்குமார், விருதுநகர்.



விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள்

மதுரை கீழஆவணிமூல வீதியில் இருந்து சொக்கநாதர் கோயில் வரை ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்களின் இதுபோன்ற செயல்களால் மேலும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ராமநாதன், மதுரை.



செயல்பாட்டுக்கு வராத கழிப்பறை

தேனி மாவட்டம், தேவாரம் மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் கழிப்பறை கட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் கூட இதுவரை அதனை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பெண்கள் சாலையோரங்களில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பென்னிகுக் விவசாயிகள் முன்னேற்ற சங்கம்.



மண் சாலையான பேவர்பிளாக் சாலை

மதுரை செல்லூர் பகுதியில் சமீபத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் மண்ணை கொட்டி மண் சாலையாக மாற்றிவிட்டனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடு மாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. இவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரேசன், செல்லூர், மதுரை.



மேம்படுத்தப்படுமா கூடல்நகர் ரயில் நிலையம்?

மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்துக்கு சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் ரயில்வே பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே கூடல்நகர் ரயில் நிலையத்துக்கு சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

விஷ்வா, மதுரை.



சாலையின் நடுவே மின்கம்பங்கள்

மதுரை புதுஜெயில் ரோட்டில் உள்ள மின்சாரக் கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படு கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், மதுரை.



சீரமைக்கப்படாத மழைநீர் வாய்க்கால்கள்

மதுரை மாநகராட்சியில் உள்ள மழைநீர் வாய்க்கால்கள் அனைத்தும் தற்போது கழிவுநீர் வாய்க்கால்களாக மாறிவிட்டன. விரைவில் பருவமழை தொடங்க உள்ள தால் அனைத்து மழைநீர் வாய்க்கால்களையும் சுத்தப் படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 days ago

மற்றவை

15 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

6 months ago

மேலும்