இந்த வாரத்துக்கான தலைப்பு
ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் அளித்த வாக்குறுதிகள் இருக்கட்டும்... தமிழ்நாட்டில் புதிதாக பதவி ஏற்கும் அரசு உடனடியாக கையெழுத்திட வேண்டிய கோப்புகள் எவை? ஏதேனும் மூன்றைச் சொல்லுங்கள்... அதற்கான காரணத்தையும் சொல்லுங்கள்...
தனவந்தன், தாம்பரம்
ஆட்சிக்கு வருபவர்கள் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு முதல் கையெழுத்திடவேண் டும். நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரினால் மழைக் காலங்களில் வெள்ள நீர் சேமிக்கப்படுவதுடன் கடந்த ஆண்டு சென்னை, கடலூர் போன்ற பகுதி களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் போல் ஏற்படாமல் தடுக்கலாம். இரண்டாவதாக நிறைய இடங்களில் சாலைகள் மிகவும் சேத மடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. சாலைகளை உடனடியாக போர்க் கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக மது விலக்கை அமல்படுத்த உடனடியாக கையெழுத்திட வேண்டும்.
மகேந்திரன், போரூர்
முதலாவதாக மாற்று வருமானத்துக்கு வழிசெய்து கொண்டு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். குடிப்பழக்கத்தால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் சீரழிந்து வருகிற சூழ்நிலையில் இனிமேலும் மதுக் கடைகளை வைத்திருப்பது தேவையற்ற ஒன்று. இரண்டாவதாக கல்வித் துறை. கல்வி ஒட்டு மொத்தமாக தனியார்மயமாகி, பணக்காரர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை மாற்றி மீண்டும் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியில் நடந்தது போல அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மூன்றாவதாக சுகாதாரத் துறை. சுகாதாரத் துறையும் கல்வியைப் போலவே முற்றிலும் கார்ப்பரேட் நிறுவனங் களின் வசம் மாறிவிட்டது. எந்த அரசு மருத் துவமனையிலும் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணி யாளர்கள் இல்லை. எனவே சாதாரண குடிமகன் நல்ல மருத்துவ வசதி பெற சுகாதாரத் துறைக்கு தேவையானவற்றை முதலில் செய்துதர வேண்டும்.
தங்கம், நங்கநல்லூர்
முதலாவதாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், ஏனெனில் மதுவால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரண் டாவதாக விலைவாசியை குறைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகையான பொருட்களின் விலையையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். மூன்றா வதாக வேலைவாய்ப்புக்கு முக்கியத் துவம் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு இல்லாததால்தான் நிறைய குற்றச்செயல்கள் நடக்கின்றன. எனவே அரசு அல்லது தனியார் என ஏதாவது ஒன்றில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஆ.நந்தகோபாலன், ராமாபுரம்
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதலாவதாக முன்னுரிமை தர வேண்டி யது லோக் ஆயுக்தா கொண்டு வருவதற்காகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவது பரவியுள்ளது. எனவே இதைத் தடுக்க லோக் ஆயுக்தா அவசியம். இரண்டாவதாக மது விலக்கு. இத்திட்டத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என உடனடியாக கொண்டு வருவது ஆபத்தானதாகும்.
எனவே புதிய சட்டம் இயற்றி, எப்படி இதன்மூலம் வரும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவது என்று ஆராய்ந்து 6 மாத காலத்துக்குள் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மூன்றாவ தாக தொழில்துறை வளர்ச்சி பெருக வேண்டும். நமது இளைஞர்கள் வேலை யில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். விவசாயத்தை பாதிக்காத வகையில் தொழில்துறையில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்.
ஆர்.எத்திராஜ், மேற்கு சைதாப்பேட்டை
புதிதாக பதவி ஏற்கும் அரசு முதலா வதாக கையெழுத்திட வேண்டிய கோப்பு மதுவிலக்கை கொண்டு வருவதற்காகவே இருக்க வேண்டும். காரணம் மதுவால் பெரும்பாலான இளைஞர்களும், குடும்பப் பெண் களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இரண்டாவதாக தடையற்ற மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். ஏனெனில் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் இன்றியமையாத தாகும். எனவே தடையற்ற மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவது புதிய அறிவியல் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும், அவர் களது ஆராய்ச்சிகளை தொடரவும் புதிய அரசு உதவ வேண்டும். ஏனென்றால் புதிய கண்டுபிடிப்புகள்தான் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும்.
முத்துராமலிங்கம், திருமுல்லைவாயில்
புதிய அரசு முதல் கையெழுத்தாக மது விலக்கை அமல்படுத்துவதற்கான கோப்பில் தான் கையெழுத்திட வேண்டும். ஏனெனில் மதுவினால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இரண்டாவதாக மணல், கிரா னைட் மற்றும் தாது மணல் கொள்ளையைத் தடுத்து இவற்றை அரசுடைமையாக ஆக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் மட்டுமே ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயம் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால் தமிழகம் முழுவதும் எத்தனை கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும். இவற்றைத் தடுக்க கனிம வள குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
மூன்றாவதாக லோக் ஆயுக்தாவை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் ஊழலில் ஈடுபட்டு பிடிபடும் அரசியல்வாதி மற்றும் அரசு ஊழியர்களை 3 மாதத்துக்குள் விசாரித்து அவர்கள் மேல் உள்ள குற்றச் சாட்டு நிரூபணமானால் அவர்களது சொத் துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago