இந்த வாரத்துக்கான தலைப்பு
ஆட்சிக்கு வந்தபிறகும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்கள் / வேட்பாளர்கள் / கட்சிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என நினைக்கிறீர்கள்? நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளைக் கூறுங்கள்.
ரங்கசாமி, பெருங்குடி
தேர்தல் அறிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் விதமாக, அவற்றில் சாத்தியமில்லாத அறிக்கைகளையும், திட்டங்களையும் அறிவிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் அதை எந்த கட்சிகளும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இலவசம் என்றாலே போட்டி போடும் மக்கள் சமூகத்தில் அரசியல் கட்சிகள் ஏமாற்றுகின்றன என கூறுவது சரியல்ல.
மக்கள் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். தெரிந்தும்கூட ஏமாறுகிறார்கள் என்றால் தவறு மக்கள் மீதுதான் இருக்கிறது. ஆகவே தேர்தல் ஆணையம் தான் இப்பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். தொகுதி சார்ந்த நலத் திட்டங் களை வேட்பாளர்களும், மாநிலம் சார்ந்த திட்டங்களை மாநில அரசும் வெளியிடுவதில் தவறில்லை. ஆனால் வளர்ச்சிக்கு சிறிதும் தொடர்பில்லாத வாக்குறுதிகளை அறிவிப்பவர்கள் மீது எந்த வித கருணையும் காட்டாமல், அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரத்தை தேர்தல் ஆணை யத்துக்கு வழங்க வேண்டும். அப்படிச் செய் தால் போலி அரசியல் நடிப்புகள் மாறும்.
சுப்ரமணியன், வில்லிவாக்கம்
தேர்தல் கமிஷன் தேர்தலை நல்லமுறை யில் நடத்தி முடித்துவிட்டு அப்படியே இருந்து விடக்கூடாது. ஒரு வருடம் கழித்து அந்தந்த வேட்பாளர்கள் கொடுத்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று கமிட்டி அமைத்து தொகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அடுத்து வரும் தேர்தலில் வேட்பாளர் கள் பய உணர்வுடன் செயல்படுவார்கள்.
ராஜகோபாலன், நெமிலிச்சேரி
மக்கள் ஆட்சி முறையில் உள்ள மாபெரும் குறைபாடே கொடுத்த வாக்குறுதிகளை தேர்ந்து எடுக்கப்பட்ட கட்சிகள், உறுப்பினர் கள் செயல்படுத்தாததுதான். வாக்குறு திகளை நிறைவேற்றாத எம்எல்ஏ அல்லது எம்பி மீதும் கட்சி தலைமை மீதும் கிரிமினல் வழக்கு தொடரும் வகையில் சட்டம் திருத்தப்படவேண்டும்.
குமணன், மேடவாக்கம்
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். தேர் தல் அறிக்கை வெளியி டும் கட்சி தலைவர்கள் கூட் டத்தை தேர்தல் ஆணை யம் கூட்டி வெற்றிபெற்ற பிறகு வாக்குறுதிகளை நிறை வேற்றுவோம், இல்லை என்றால் பதவியை ராஜி நாமா செய்வோம் என்று எழுதி வாங்கிக்கொள்ள வேண் டும். இதனால் வெற்றி பெற்ற வேட்பா ளர் பயந்து கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.
ராஜேந்திரன், வாலாஜாபாத்
ஓட்டு வாங்குவதற்காக தேர்தல் வாக்குறு தியை அளித்துவிட்டு வெற்றிபெற்ற பின் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அவரது எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும். மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கமுடியாது எனச் சட்டம் கொண்டுவர வேண்டும்.
ரவி, ஈக்காட்டுத்தாங்கல்
தேர்தல் நேரத்தில் மக்களை சந் தித்து ஓட்டு வாங்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்க ளிக்கும் மக்களை முட்டாளாக்க நினைக்கின்றனர். இதை தடுக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த வாக்குறுதியை இத்தனை நாட்களில் முடிப்பேன் என்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெற்ற பிறகு அதை செயல்படுத்தாவிட்டால் அவர் களுக்கு 5 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பழகன், வளசரவாக்கம்
ஒரு எம்எல்ஏ மீது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று வழக்கு தொடர்ந்தால் அவருக்கு அரசு அளிக்கும் அனைத்து சலுகையையும் ரத்து செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும்.
சுரேஷ், அனகாபுத்தூர்
வாக்குறுதிகளை செயல்படுத்தாத எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும். எல்எல்ஏ கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளாரா என்று பார்ப்பதற்கு குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதா, குன்றத்தூர்
கட்சிகள் கொடுக்கும் தேர்தல் வாக்குறுதி களை தேர்தல் ஆணையம் முறையாக பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். நிறைவேற்ற முடியாத போலியான வாக்குறுதி களை அதில் இனம் கண்டு நீக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும். ஆட்சிக்கு வந்த பிறகு தாங்கள் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள் அல்லது மக்கள் பிரதிநிதிகளை இடைநீக்கம் செய்யலாம்.
முக்கிய செய்திகள்
மற்றவை
2 days ago
மற்றவை
15 days ago
மற்றவை
23 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
6 months ago