அன்பாசிரியர் நெகிழ்ச்சி: அரசு பள்ளியின் தாகம் தீர்த்த கலந்தர்

By க.சே.ரமணி பிரபா தேவி

மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.

இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

>அன்பாசிரியர் 14 - பார்வதி ஸ்ரீ: இணையத்தில் தமிழ் வளர்க்கும் ஆசிரியர்! மூலம் சேலம், கந்தம்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, தண்ணீர் வசதியைக் கொண்டு வர வேண்டும் என்பதை தன் எதிர்கால திட்டமாக ஆசிரியர் பார்வதி ஸ்ரீ கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த அத்தியாயத்தைப் படித்த 'தி இந்து' வாசகர் சையத் மு. கலந்தர் (Sayed M Khalanthar), பள்ளிக்கு தேவையான ஆழ்துளைக் கிணறையும், தண்ணீர் டேங்கையும் அமைக்க பொருளாதார உதவி செய்திருக்கிறார். இதற்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது.

துபாயில் பணிபுரியும் கலந்தர் தன் பெற்றோர்களின் நினைவாக ஆழ்துளைக் கிணறையும், தண்ணீர் டேங்கையும் அமைத்துக் கொடுத்ததாகச் சொல்கிறார்.

"வெயிலின் வேட்கையைத் தணித்த கலந்தரின் அறச் செயலுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்; இதில் பெரும்பங்காற்றிய 'தி இந்து'வை மறக்க மாட்டோம்" என நெகிழ்கிறார் அன்பாசிரியர் பார்வதி ஸ்ரீ.

இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

1 day ago

மற்றவை

9 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்